தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகினார் தேவர்கொண்டா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான லைகர் படம் மிகப்பெரிய தோல்வியை இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இப்படத்தை தொடர்ந்து வெளியான குஷி படம் வெற்றி பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இவர் தற்போது இயக்குனர் கவுதம் இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.அடுத்த வருடம் மார்ச் மாதம் இப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கொண்ட பொழுது மாடிப்படியில் கீழே இறங்கும்போது கால் தவறி கீழ் விழுந்து உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#VijayDevarakonda slips and falls down. #VD12 pic.twitter.com/649XY8HCyu
— Parthiban A (@ParthibanAPN) November 8, 2024