பணமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் வைத்து சொத்து சேர்ப்பு! சசிகலா பற்றி ஐகோர்ட்டில் வருமானவரித்துறை அறிக்கை!!

பணமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் வைத்து சொத்து சேர்ப்பு! சசிகலா பற்றி ஐகோர்ட்டில் வருமானவரித்துறை அறிக்கை!! 1

பணமதிப்பிழப்பு செய்யும் வகையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையில் ரூபாய் 500- 1000 நோட்டுகள் தடைசெய்யப்பட்டது. இந்த பணமதிப்பை இழந்த நோட்டுகளை ஷாப்பிங் மால்கள் வாங்க சசிகலா பயன்படுத்தினார் என சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய உதவியாளராக இருந்த சசிகலா தற்போது சிறை சாலையில் உள்ளார் இவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

விளம்பரம்

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், நவம்பர் 8, 2016-க்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி ஒரு ரிசார்ட் இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கி உள்ளார். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும் என கூறி உள்ளது.

விளம்பரம்

Leave a Comment