நடிகர் அதர்வா மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பட்டத்து அரசன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ தற்போதைய வெளியாகியிருக்கிறது. முரளியின் மகனான அதர்வா 2010 ஆம் ஆண்டு பாணா காத்தாடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் அவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக் குதிரை, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பரதேசி படம் தான். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குருதி ஆட்டம் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் பட்டத்து அரசன் படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்கிற படத்தை இயக்கியதின் மூலமாக அறிமுகமானவர் சற்குணம். இவர் களவாணி 2, வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட படங்களை ஏற்றி இருக்கிறார். இதில் சண்டிவீரன் படத்தில் ஏற்கனவே அதர்வாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் பட்டத்து அரசன் படத்தில் மீண்டும் அதர்வாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இவருடன் இணைந்து ஜிகேஎம் தமிழ் குமரனும் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிராமத்து பின்னணியை கொண்ட கதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ராஜ்கிரனுடன் இணைந்து அதர்வா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவர்களுடன் சேர்ந்து ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தில் இருந்து யாரோ யாரோ என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Think Music India