விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருப்பது மௌன ராகம். இது தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளாக இருந்த சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் வளர்ந்து அண்ணன் தம்பிகளாக இருக்கும் வருண் மற்றும் தருண் ஆகியோரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக கதை நகர்ந்து வருகிறது. வழக்கம் போல சக்தியையும் மற்றும் மல்லிகாவையும் காதம்பரியும் அவரது குடும்பத்தினரும் கொடுமை செய்து வருகின்றனர். ஆனாலும் சக்தி தனது கணவர் துணையுடன் காதம்பரி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் சாதிகளை முறியடித்து வருகிறார். இதனால் கதை மிக விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சக்தியின் கணவர் வருணுக்கு ஒரு மன நோய் இருக்கிறது. அவரது தாயார் தீ விபத்து ஒன்றில் இறந்ததை நேரில் பார்த்த வருணனுக்கு தீயை பார்த்தாலே பயம் ஏற்படும். அதற்காக அவர் பல நாட்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு இந்த நோய் குணமாகவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது அத்தை ஷீலா தான். அவர் வருணுக்கு உடல்நலம் சரியாக கூடாது என்பதற்காக மாத்திரைகளை மாற்றி மாற்றி கொடுத்து வந்துள்ளார். இதை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த சக்தி, வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டுக் கொடுத்து விட்டார். இதனால் ஷீலாவின் அண்ணனும் வருணனின் அப்பாவுமான மனோகர் ஷீலாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

தற்போது சக்தியும் வருணும் வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆன முதலே ஹனி மூனுக்கு செல்ல முடிவெடுத்து செல்ல முடியாமலேயே இருந்து வருகின்றனர். தற்போது அணைத்து பிரச்சினைகளும் முடிந்து மீண்டும் இருவரும் ஹனி மூன் செல்ல முடிவெடுத்து உள்ளனர். அவர்கள் கிளம்பும் போது தருணும் அவரது தந்தையும் சேர்ந்து நாங்களும் உங்களுடன் வருகிறோம் என்று பிராங்க் செய்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television