சிலர் நல்ல திறமைகள் இருந்தும் சினிமாவில் பெரிய அளவில் சாதித்திட முடியாமல் தவிப்பார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அதர்வா. நடிகர் முரளியின் மகனாக திரைத்துறையில் அறிமுகமானாலும், முயன்றே தனக்கென தனியாக ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.

எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 8 தோட்டாக்கள். இந்த படத்தை இயக்கியவர் ஸ்ரீ கணேஷ். விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகணேஷ், அதர்வாவை நாயகனாக வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டாலும், பல்வேறு சிக்கலால் படத்தின் பணிகள் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. படத்தின் வெளியிட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் வெளியாவது தாமதமாகிக் கொண்டே சென்றது.இப்படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள குருதி ஆட்டம் படத்தில், அதர்வா ஒரு விபத்தில் சிக்குகிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளை ஏற்பட்டு அவரது வாழ்க்கையே மாறிவிடுகிறது. இந்த பிரச்சனைகளை அதர்வா எவ்வாறு எதிர்கொண்டார். எவ்வாறு அவரது வாழ்க்கை மாறியது என்பதே படத்தின் கதையாக உருவாகியுள்ளது.
நீண்ட காலமாகவே வெளியாகாமல் உள்ள இருந்த ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இப்பொது வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 5ந் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதர்வா நடித்த 100 திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகததால் இப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Video Courtesy – Five Star Audio