நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் மேகா ஆகாஷ். இப்படத்தின் மூலம் இவர் பல ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து கலக்கி உள்ளார். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இதன்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக போராடிய இவருக்கு நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனையும் சரியாக பயன்படுத்தி நடிக்க தொடங்கினார். தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மேகா.

இந்நிலையில் இவர் நீண்ட காலமாக காதலித்து வந்த சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் இவர்களின் திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக நடிகை மேகா ஆகாஷ் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த இவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
