Categories: சினிமா

ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள அதர்வா.! தெறிக்க விடும் Trigger படத்தின் டீஸர்..!

வெளியிட்டது

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ட்ரிகர், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசரை பைனான்சியர் அன்புச் செழியன் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா பல நல்ல படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பரதேசி தான். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருப்பார். இதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அதர்வா. இதற்குப் பின் அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷனில் பின்னி எடுத்துள்ள அதர்வா.! தெறிக்க விடும் Trigger படத்தின் டீஸர்..! 1

அவர் தற்போது குருதி ஆட்டம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள படம் தான் ட்ரிகர். இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். நூறு படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அதே இயக்குனருடன் இணைந்து அதர்வா நடித்துள்ளார். இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சீதா, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, சின்னி ஜெயந்த் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர் பெற்றுள்ளது. தமிழக முழுவதும் இந்த படம் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டீசரை பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் வெளியிட்டுள்ளார். நீங்களும் அந்த படத்தின் டீசரை காண.. Watch trigger Teaser below..

YouTube Video Code Embed Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்