பருத்திவீரனை மிஞ்சும் அளவிற்கு விருமன்.. படத்தின் சில காட்சிகள் வெளியானது.!

நாளை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது விருமன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் கார்த்தியும், இயக்குனர் சங்கரின் மகள் அதிதியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சூரி, பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, மைனா நந்தினி, இளவரசு, சிங்கம் புலி என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். கொம்பன், குட்டி புலி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பருத்திவீரனை மிஞ்சும் அளவிற்கு விருமன்.. படத்தின் சில காட்சிகள் வெளியானது.! 1

விளம்பரம்

இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலரை பார்த்தபின்பு பருத்திவீரன் மற்றும் கைதியை பிரதிபலிப்பதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் இருந்து கஞ்சா பூ கண்ணால பாடலும், மதுரவீரன் பாடலும் மிகப் பிரபலமாக உள்ளது. கஞ்சாப் பூ கண்ணால பாடல் பலராலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யப்பட்டு நடனம் ஆடி வருகிறனர். இந்த படத்தில் வரும் மதுரவீரன் என்ற பாடலை அதிதி, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

தொடர்புடையவை  திருச்சிற்றம்பலம் வெற்றியா தோல்வியா? முழு விமர்சனம் இதோ.! TamilGlitz ரேட்டிங் - 2.5/5

பருத்திவீரனை மிஞ்சும் அளவிற்கு விருமன்.. படத்தின் சில காட்சிகள் வெளியானது.! 3

விளம்பரம்

படம் வெளியாவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது விருமன் படம் இதற்கு முக்கிய காரணம் அதிதி தான் என்று பல நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விருமன் படம் வெளியாவதற்கு முன்பே அதிதி பல படங்களில் கமிட்டாகி வருவதும், செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் நடனம் ஆடியதும் சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க மதுரை வீரன் பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடியிருந்ததை நீக்கிவிட்டு, அதிதியை பாட வைத்துள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதையெல்லாம் அதிதியை கண்டு கொள்ளவே இல்லை. தான் தன் திறமையால் தான் வந்திருக்கிறேன் என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிதி. இந்த நிலையில் படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்த காட்சிகளை நீங்களும் காண.. Watch Virman Promo Below..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Moviebuff Tamil

விளம்பரம்

Leave a Comment