ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து விஜயுடன் அடுத்தடுத்து “தெறி, மெர்சல், பீகில்” என இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியே.
தெறி படத்தின் மூலம் 150 கோடி வசூலை எட்டிய அட்லீ அடுத்து வெளியான மெர்சல் படத்தில் 260 கோடியை தாண்டினார். அதை தொடர்ந்து வந்த பிகிலில் 320 கோடிக்கு மேல் வசூலை செய்து தமிழ் சினிமாவின் மிக பெரிய இயக்குனராக உருவெடுத்தார்.
இவரின் படங்கள் தொடர் வெற்றியை பெற்றாலும் இவரின் மீது ஒரு மிக பெரிய குற்றசாட்டு எப்போதும் இருந்து கொண்டே வருகிறது. ராஜா ராணி மௌன ராகம் சாயலிலும், தெறி சத்ரியன் சாயலிலும், மெர்சல் அபூர்வா சகோதர்கள் மற்றும் மூன்று முகம் செயலிலும், கடைசியாக வெளியான பிகில் படம் நேரடியாக ஷாருக் கானின் “சக் தே இந்தியா” படத்தை நிறைய இடங்களில் காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக பயங்கரமாக விமர்சிக்கப்பட்டார்.
பலர் இவர் மேல் குறை கூறினாலும், இவருடைய வளர்ச்சியை அது எந்த வகையிலும் தடுக்கவில்லை. தற்போது அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அட்லீ அறிமுகமாகிறார். இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இதில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு தோன்றுவார். இதனிடையே, இப்படத்தின் டீசர் ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான ‘டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக நெட்டீசன்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.
ஹோலிவுட்டில் 1990ஆம் ஆண்டில் வெளியான “டார்க்மேன்” படம் நடிகர் லியாம் நீசொன் நடிப்பில் இப்போது பிரபலமாக உள்ள “ஸ்பைடர்மேன்” இயக்குனர் சாம் ரைமி இயக்கிய முதல் சூப்பர்ஹீரோ படமாகும். மூன்று பாகங்களாக வெளியான இந்த படம் ஹோலிவுட்டில் மிக பெரிய வெற்றி பெற்ற படமாகும். அதில் நடிகர் லியாம் நீசொன் முகத்தில் காட்டியிருப்பது போலவே இப்பொது “ஜவான்” படத்திலும் ஷாருக் கான் இருக்கிறார்.
அதனை கண்டு பிடித்துள்ள நெட்டிஸின்கள், இந்தியபடங்களை காப்பி அடித்தால் கண்டு பிடித்துவிடுவார்கள் என தெரிந்து கொண்ட அட்லீ நேக்காக ஹாலிவுட் படத்தை காப்பி அடித்துள்ளார் என பலரும் பயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள்.