நடிகர் கமலின் நடிப்பில் அவருடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூர்யா நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகியுள்ள படம் “விக்ரம்”. முதல் காட்சி முதலே படத்திற்கு மிக பெரிய நல்ல விமர்சங்கள் கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் லோகேஷின் டைரக்ஷன் திறமையை பாராட்டி வருகின்றனர். கமல், விஜய் சேதுபதி, ஃபகத் என மூவரும் நடிப்பில் மிரட்ட, படம் அண்மையில் வெளியான படங்கள் அனைத்தையும் விட மிக பெரிய வசூல் செய்யும் என் எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நமது சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டும் செய்தி என்றால் அது “விகரம்” படம் பற்றிய விமர்சனம் தான். பலரும் தங்களுடைய சந்தோசத்தை விமர்சங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். போது மக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் படத்தை கொண்டாட துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் கமல் நடித்த விக்ரம் படத்தை நடிகை குஷ்பு தற்போது தன்னுடைய பார்வையை தெரிவித்துதுள்ளார். அதில், “ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்து இருக்கேன், நான் உலக நாயகனுடைய மிகப்பெரிய விசிறி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான், இந்த படத்தை பார்த்த பின்னர் தான் நாம் அனைவருமே ஏன் கமலை உலக நாயகன் என்று சொல்றோம் என்று புரியும்.” என கூறினர்.

இந்த படத்தில் நடித்த ஃபகத் ஃபாசில் மிகப்பெரிய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஃபகத் ஃபாசிலை பார்த்தால் முத்தம் கொடுக்கணும் போல இருக்கு” எனவும் கூறினார். “இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பு ரொம்பவுமே ஒரு நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டியுள்ளார்,ஆனால் விஜய் சேதுபதியை பார்த்தால் மட்டும் திட்டணும் போல இருக்கும் அந்த அளவுக்கு விஜய் சேதுபதி நடித்துள்ளார்.” என தன்னுடைய விமர்சனத்தை கூறி சென்றுள்ளார்.

படத்தை பார்த்த பலரும், நிச்சயம் அடுத்து வரவுள்ள “கைதி 2” மற்றும் “விக்ரம் 3” படங்கள் எப் போது வந்தாலும் மிக பெரிய வெற்றியை பெரும், அதில் எந்த வித சந்தேகமும் இல்லை, நிச்சயம் விரைவில் அந்த படங்களை எடுத்து இயக்குனர் லோகேஷ் மக்களை ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வை இந்த படத்தில் கொடுத்தது போல கொடுப்பார் என நம்பிக்கையில் அந்த படங்களை ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.
Video Courtesy – ThiCinemas