அட்லீ மகனை பார்த்து இருக்கீங்களா.? முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

வெளியிட்டது

இயக்குனர் அட்லீ தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்குள் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர் தமிழில் வெளியான ‘ராஜா ராணி’ என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

அட்லீ மகனை பார்த்து இருக்கீங்களா.? முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 1

அதன் பின்னர் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என்கிற படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்களுமே வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தது. பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற அவர் ‘ஜவான்’ படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கினார். இந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை குறித்து சாதனை படைத்திருந்தது. இது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அட்லி.

தற்போது அட்லி அடுத்த என்ன செய்ய இருக்கிறார்? என்ற ஆர்வம் ரசிகர்களே எழுந்திருக்கும் நிலையில், எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது.அட்லீயும் நடிகை பிரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரியா தாய்மை அடைந்திருந்தார். கடந்த வருடம் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பையும் நடத்தி இருந்தார் அட்லி.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தனது மகனுக்கு ‘மீர்’ என பெயர் வைத்திருப்பதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மீருக்கு ஒரு வயது முடிந்திருக்கும் நிலையில், மகனின் முகத்தை இத்தனை நாட்காளாக காட்டாமல் இருந்து வந்தார். தற்ப்போது விமானநிலையத்தில் தனது மகனை அழைத்து வந்தபோது பத்திரிக்கையாளர்கள் அட்லீ மகனை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்