விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தனது தாய் ரோகிணி தான் என்கிற உண்மையை க்ரிஷ் அறியும் தருணத்தை தற்போது நெகிழ்ச்சியுடன் ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். கல்யாணி என்ற பெயரை ரோகிணி என மாற்றிக்கொண்டு, மனோஜை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கிருஷ் என்கிற ஒரு குழந்தையும் இருக்கிறார். இதையெல்லாம் மறைத்து மனோஜுடன் ரோகிணிக்கு திருமணம் நடைபெறுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனது மகன் கிருஷிடம் ரோகிணி அத்தை என கூறிக்கொண்டு பழகிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த உண்மை கிருஷ்க்கு தெரிய வருகிறது. கண்களில் அடிபட்டு ஆபரேஷன் முடித்து மருத்துவமனையில் இருந்த கிருஷையும் ரோகிணியின் தாயாரையும் முத்து மற்றும் மீனா இருவரும் தங்களது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அப்போது ரோகிணியின் தாயார் கிருஷை பார்த்துக் கொள்ளுமாறு ரோகிணியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி கிருஷ் என்னுடைய மகன் நான் அவனை பார்த்துக் கொள்வேன் என பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைக் கேட்கும் கிருஷ் ரோகிணியிடம் சென்று நீதான் என்னைப் பெற்ற அம்மாவா? என கேட்கிறார். அப்போது மனமுடைந்த ரோகிணி கிருஷை கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television