ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, கௌதம்.! மஹாவிடம் போட்டு கொடுத்த பிரபா.!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் ஆஹா கல்யாணம். தற்போது இந்த தொடரில் ஐஸ்வர்யா மற்றும் கௌதம் இருவரும் சந்தித்துக் கொள்வதை பிரபா பார்த்து விடுகிறார். மேலும் அவர் மகாவிற்கு போன் செய்து அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. கோடீஸ்வரி என்கிற ஏழை பெண்ணின் மூன்று மகள்கள் தான் ஐஸ்வர்யா மஹா மற்றும் பிரபா. இதில் ஐஸ்வர்யாவை பணக்கார வீட்டுப் பையனாக இருக்கும் சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். ஆனால் சூர்யாவின் சித்தி மகன் கௌதம் சூர்யாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருக்கு பார்த்த ஐஸ்வர்யாவை தன் காதல் வலையில் விழ வைத்து திருமணத்தன்று அவரை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, கௌதம்.! மஹாவிடம் போட்டு கொடுத்த பிரபா.! 1

விளம்பரம்

ஐஸ்வர்யா மண்டபத்தில் இருந்து காணாமல் போன செய்தி கேட்டு கோடீஸ்வரி தனது இரண்டாவது மகள் மஹாவை சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்கிறார். அதன் பின்னர் குடும்பத்தில் பல சண்டைகள் ஏற்படுகிறது ஐஸ்வர்யா ஓடிப் போனதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நிரூபித்தால் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லி மஹா தற்போது சூர்யாவிடம் சவால் விட்டிருக்கிறார். இதனால் மஹாவும் சூர்யாவும் தற்காலிகமாக இணைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யா கௌதமுக்கு போன் செய்து வீட்டில் யாரும் இல்லை, நாம் இருவரும் சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதை மூன்றாவது தங்கையாக இருக்கும் பிரபா ஒளிந்து இருந்து கேட்டு விடுகிறார்.

தொடர்புடையவை  "அடுத்தவன் பொண்டாட்டிய கைக்குள்ள வச்சிக்கிட்டு சொத்தை அபகரிக்க பாக்குறான்" கேவலமாக பேசும் குணசேகரன்

ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, கௌதம்.! மஹாவிடம் போட்டு கொடுத்த பிரபா.! 3

விளம்பரம்

பின்னர் மஹாவுக்கு போன் செய்து ஐஸ்வர்யா குறித்த உண்மைகளை கூறுகிறார். இதனால் மஹா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இதற்கிடையே சூர்யாவின் மற்றொரு தம்பியாக இருக்கும் ராமை அழைத்துக் கொண்டு பிரபா கிளம்புகிறார். அங்கு ஐஸ்வர்யாவும் கெளதமும் சந்திப்பதை இருவரும் பார்த்து விடுகின்றனர். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment