சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் மருமகள்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வர, ஜீவானந்தமும் அங்கு இருக்கிறார் அந்த சமயம் பார்த்து குணசேகரனும் அங்கு வருகிறார். அவர் ஜீவானந்தமை ஒருமையில் மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜனனி கோபப்பட்டு ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது குணசேகரன் தான் என்கிற உண்மையை கூறி விடுகிறார். இதனால் குணசேகரன் போலீஸிடம் மாட்டிக் கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய் இரண்டு நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் தனது மனைவியும் ஜீவானந்தமும் தான் அவரை எங்கேயோ ஒளித்து வைத்து நாடகம் ஆடுவதாக குணசேகரன் கூறுகிறார். ஆனால் குணசேகரன் தான் தர்ஷினியை ஆட்களை வைத்து கடத்தி வைத்து விட்டு பழியை ஜீவானந்தம் மீதும், ஈஸ்வரி மீதும் போடுகிறாரோ? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கிடையில் தர்ஷினியை தேடிச் சென்ற மருமகளுக்கு அவரது பள்ளிக்கூட பைக் கிடைக்கிறது. அதை எடுத்துக்கொண்டு தற்போது காவல் நிலையத்திற்கு வருகை தந்திருக்கின்றனர். ஏற்கனவே காவலர்கள் ஜீவானந்தமே கைது செய்து அங்கு வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு வரும் ஆதி குணசேகரன் ஜீவானந்தமை ஒருமையில் பேசுகிறார். மேலும் “அடுத்தவன் மனைவியை கைக்குள் போட்டுக் கொண்டு, சொத்தை அபகரிக்க முயல்கிறான்” என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபமடையும் ஜனனி, “ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது நீங்கள்தான்” என்கிற உண்மையை போலீஸ் ஸ்டேஷனில் போட்டு உடைத்து விடுகிறார். எனவே குணசேகரன் போலீசிடம் மாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV