தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.! புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.!

நடிகை லட்சுமிமேனன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் பிக் பாஸ் வெற்றியாளர் ஒருவருடன் தமிழ் திரையுலகில் நடிக்க வந்திருக்கிறார். அந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புகளுடன் தொடங்கியது. படப்பிடிப்புகள் இன்று தொடங்கிய நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தமிழில் வெளியான ‘கும்கி’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை லட்சுமி மேனன். இவ்வாறு அதன் பின்பு பல படங்களில் நடித்திருக்கிறார். சில நாட்களாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆரியுடன் புது படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.! புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.! 1

விளம்பரம்

இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் 4ன் டைட்டில் வின்னரான ஆரி பிக் பாஸ்க்கு பின்னர் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்து வருகிறது. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல படங்களில் நடித்து வருகிறார். சேரன் இயக்கத்தில் வெளியான வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்து இருக்கும் அவர், தற்போது “மெட்ராஸ்டெக் ப்ரோடுக்ஷன்” என்கிற கம்பெனி தயாரிக்கும் படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர பாண்டியன் இயக்குகிறார்.

தொடர்புடையவை  இந்த ஈஸ்வரியை விட்டுட்டு போக உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு? கனிகா வெளியிட்ட வீடியோ.!

தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.! புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு.! 3

விளம்பரம்

இந்தப் படத்தில் நடிகை லட்சுமிமேனன், மைம் கோபி, பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த தகவலை ஆரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்திருக்கிறார். பலரும் ஆரி மற்றும் லட்சுமிமேனனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment