சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதாக நினைத்து அப்பத்தா உயிருடன் வருகிறார். நாளையுடன் சீரியல் முடிவடையும் இருக்கும் நிலையில், தற்போது பல அதிரடி திருப்பங்களை இயக்குனர் வைத்துள்ளார். சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட சீரியலாக இருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் விரும்பிப் பார்த்த சீரியல் முடிவடைவதால் ரசிகர்கள் கவலையின் உச்சக் கட்டத்தில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதி குணசேகரன் அப்பத்தாவை கொலை செய்தார் என்றும், ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்து விட்டார் என்றும் கிள்ளிவளவன் சாட்சியாக மாறி போலீஸிடம் வாக்குமூலம் கொடுக்கிறார். இதனால் ஆதி குணசேகரனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோர்ட்டில் கொடுத்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற கதிர் ஞானம் தங்களது மனைவிகளை வற்புறுத்தி வருகின்றனர். இதனால் கோர்ட்டில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோர் என்ன சொல்லப் போகிறார்கள் என்கிற பரபரப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது அப்பத்தா காரில் வந்து இறங்குகிறார்.

அவரின் வருகையை எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். கார் விபத்தில் அவர் இறந்து விட்டதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் வந்திருப்பது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV