Categories: சினிமா

‘குழந்தைகளுக்கு கூட இந்த படம் புடிக்காது”.! ‘அயலான்’ படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.!

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘அயலான்’. இந்த திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஹீரோ சிவகார்த்திகேயன் ஒரு இயற்கை ஆர்வலராக இருக்கிறார். அவர் இயற்கை விவசாயம் பார்த்து வருகிறார். பின்னர் அவர் அதை கைவிட்டு விட்டு மனிதர்கள் பூமிக்கு எதிராக செய்யும் தீங்குகளுக்கு எதிராக போராடத் தொடங்குகிறார். அப்போது வேற்று கிரகத்திலிருந்து ஒரு ஏலியன் வருகிறது. அந்த ஏலியனிற்கும், சிவகார்த்திகேயனுக்கும் அறிமுகம் கிடைக்கிறது. ஏலியன் வந்த நோக்கத்தை புரிந்து கொள்ளும் சிவகார்த்திகேயன் அதனுடன் சேர்ந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'குழந்தைகளுக்கு கூட இந்த படம் புடிக்காது".! 'அயலான்' படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 1
பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து பூமியை காப்பாற்ற என்ன செய்தார்கள்? என்பது குறித்த கதைதான் ‘அயலான்’. இந்த படம் நமக்கான படம் இல்லை என்பது தெரிந்த கதைதான். குழந்தைகளை கவர்வதற்கான படம் என்பதும் நமக்கு தெரியும். ஆனால் குழந்தைகளை கவரும் வகையில் ஏலியனிடம் குறும்புத்தனங்களோ அல்லது பார்க்கும் படியாக ரசிக்கும் படியாக எதுவுமே இல்லை. ஹீரோவின் பகுதிகளில் கூட சொந்த வாழ்க்கை எப்படி இருந்தது? காதல் வாழ்க்கை? வலுவான வில்லன் என எதுவுமே சுவாரஸ்யமாக அமையவில்லை. இந்த படத்தில் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் ஏ.ஆர் ரகுமானின் மியூசிக் தான். பாடல் ஒன்றுமே நன்றாக இல்லை. பிஜிஎம் சுத்தமாக நன்றாக இல்லை.

ஏலியன் தொடங்கி படத்தில் வரும் கார்ப்பரேட் வில்லன் வரை அனைவரும் தமிழில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இவர் ஆங்கிலத்தில் பாட்டு போட்டு வைத்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படம் ஏலியன் உடன் நம்மை மிகவும் தொடர்பு படுத்தி இருக்கும். ஆனால் இதில் ஏலியன் கன்டென்ட் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. நிலாவிற்கு சென்று வந்த சிலரை மூன்று நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பார்கள். ஏனென்றால் நிலாவில் இருக்கும் சில ‘ஏலியன் பார்ட்டிக்கிள்’ நம் மீது ஒட்டி இருக்கும். ஆனால் இந்த படம் அதுபோல கூட ஒட்டாமலேயே போய்விட்டது” என்று விமர்சித்தார். நீங்களும் அவரது வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்