“படம் ரொம்ப சூப்பரா இருக்கு.!” அருண் விஜயின் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை..!

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மிஷன் சாப்டர் ஒன்’ திரைப்படம் பற்றி தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது, காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி ஜி-20 மாநாட்டில் சதி வேலை நடப்பதாக காட்டப்படுகிறது் அப்போது டெரரிஸ்டுகள், ஆர்மியை சேர்ந்தவர்களை கொலை செய்கிறார்கள். அங்கு கட் செய்த பிறகு சென்னைகாட்டப்படுகிறது. அங்கு ஹீரோவின் ஐந்து வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறது. வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்தால்தான் காப்பாற்ற முடியும் என மருத்துவர் கூற, தனது குழந்தை அழைத்துக்கொண்டு ஹீரோ லண்டனுக்கு செல்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"படம் ரொம்ப சூப்பரா இருக்கு.!" அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் 1' படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை..! 1

விளம்பரம்

அப்போது அங்கு ஒரு பிரச்சனையில் ஹீரோ மாட்டிக்கொள்கிறார். அவர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் ஒரு தீவிரவாத சர்ச்சையிலும் சிக்குகிறார். இப்படியாக முதல் 30 நிமிடங்கள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் படம் ஓடுகிறது. அதன் பின்னர் வந்த இன்டர்வெல் காட்சிகள் மிக திருப்தியாக இருந்தது. எளிதாக கணிக்க முடிந்த சூழ்நிலையிலும், அடுத்து என்ன? அடுத்து என்ன? என்கிற விறுவிறுப்புடன் போர் அடிக்காமல், சலிப்பு தட்டாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்த போதிலும் படம் போகும் வேகத்தில் அதெல்லாம் மறந்து போகிறது. குறிப்பாக ஜெயிலில் ஒரு முடிவை ஹீரோ எடுப்பார், அந்த முடிவு தவறு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அதை உடனடியாக மாற்றி வேறு ஒரு முடிவு எடுப்பார்.

தொடர்புடையவை  விஜய் Uncle என்ன பாக்க வரவே மாட்டீங்களா.? பாவமாக கேட்ட குட்டி..! உடனே வீடியோ கால் செய்த தளபதி.!

"படம் ரொம்ப சூப்பரா இருக்கு.!" அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் 1' படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை..! 3

விளம்பரம்

அது போன்ற காட்சிகள் எல்லாம் மிக அருமையாக வந்திருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அருண் விஜய், எமி ஜாக்சன் ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தங்களுடைய டார்கெட் ஆடியன்ஸ் யார் என்று தெரியாமலேயே இருக்கிறது. ‘அயலான்’ தனது டார்கெட் ஆடியன்ஸை கவர தவறிவிட்டது. இதற்கிடையில் சத்தமே இல்லாமல் ‘மிஷின் சாப்டர் ஒன்’ நல்ல படமாக அமைந்திருக்கிறது. ஓஹோ என்று இல்லாதபோதும் ஓகேவான படமாக இது இருக்கிறது” என கூறி இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment