Categories: சினிமா

சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடும் ஏ.ஆர் ரஹ்மான்.! “மாஞ்சா நீ..” பாடல் வெளியானது.!

வெளியிட்டது

‘அயலான்’ திரைப்படம் வருகிற வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது “மாஞ்சா நீ..” என்கிற கலர்ஃபுல்லான பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த இந்தப் பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரகுமானே கம்போஸ் செய்து, தயாரித்து, அதை உருவாக்கி இருக்கிறார். இதில் ஏ.ஆர் அமீன் மற்றும் ஏ.ஆர் ரகுமான் இருவரும் பாடியிருக்கின்றனர். ஏஆர் ரகுமானும் இந்த பாடலில் சிறு காட்சியில் தோன்றி அசர வைத்திருக்கிறார். அந்த அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ஆடும் ஏ.ஆர் ரஹ்மான்.! "மாஞ்சா நீ.." பாடல் வெளியானது.! 1
இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது ‘அயலான்’ திரைப்படம். ஏலியன் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கும் நிலையில் குழந்தைகளை மிகவும் கவர்ந்திழுக்கும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் இருந்து டீசர், ட்ரைலர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரைலரை பார்க்கும் போது ஆரம்பத்தில் ஏலியனைப் பார்த்து பயப்படும் சிவகார்த்திகேயன், பின்னர் அதனுடன் நட்பாக பழகி ஏலியன் பூமிக்கு வந்த காரணத்தை தெரிந்து கொண்டு அவருடன் இணைந்து சண்டை செய்வது போன்று ட்ரைலர் வெளியாகியிருந்தது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம், இரண்டு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்காக தயாரித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரகுமான் இருவரும் இணைந்து எழுதி இருக்கும் இந்த பாடலை ஏ.ஆர் ரகுமானுடன் இணைந்து அவரது ஏ.ஆர் அமீன் பாடியிருக்கிறார். கலர்ஃபுல்லாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்