கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.!

நடிகர் தனுஷ் இன்று தனது தாய் தந்தை மற்றும் மகன்கள் உடன் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.! 1
இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்கிற படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் ஒல்லியான தேகத்துடன் இருந்ததால் இவர் பலராலும் உருவக்கேலி செய்யப்பட்டார். ஆனால் தற்போது இவர் மீது வந்த விமர்சனங்களை எல்லாம் உரம் ஆக்கி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மற்றும் ஹாலிவுட் வரை தனது முத்திரையை பதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை மிகையாகாது.

விளம்பரம்

கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.! 3

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி இரண்டு படங்களும் சுமார் 100 கோடி வசூலை குவித்திருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நடிகை குஷ்பூ வீடு.! குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய கலக்கல் போட்டோஸ்.!

கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.! 5

தற்போது கைவசம் தமிழில் கேப்டன் மில்லர், தேரே இஷக் மேன் என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை அவருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

விளம்பரம்

கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.! 7
சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தார் தனுஷ். இது நாள் வரையிலும் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து பெறாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருக்கும் போயஸ் கார்டன் அருகிலேயே புதிய வீடு ஒன்றைக் கட்டி அங்கு குடியேறியிருக்கிறார். ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்துடன் இணைந்து போயஸ்கார்டனில் வசித்து வருகிறார்.

கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை.! மகன்களுடன் திருப்பதியில் மொட்டை போட்ட தனுஷ்.! 9
அவ்வபோது மகன்களை மட்டும் சென்று சந்தித்து வரும் தனுஷ் இன்று மகன்களை அழைத்துக் கொண்டு திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கிறார். மேலும் தனது கஸ்தூரிராஜா மற்றும் தாயார் ஆகியோரும் உடன் அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு தானும் தனது இரு மகன்களுக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment