காதலருடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய ஆயிஷா.! ஜோடி பொருத்தம் சூப்பர்..!

வெளியிட்டது

தனது காதலருடன் கேரளாவிற்கு டூர் சென்றுள்ள பிக் பாஸ் ஆயிஷா தற்போது அவருடன் இணைந்து கியூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தற்போது இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. ஆரம்பத்தில் டிக் டாக் செய்து வந்த ஆயிஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்கிற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார். சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆயிஷாவிற்கும் அந்தன் இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சீரியலில் இருந்து விலகினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்கிற சீரியலில் நடித்தார். பின்னர் அங்கிருந்தும் விலகிய அவர் ஜீ தமிழுக்கு சென்றார். அங்கு விஷ்ணுவுடன் இணைந்து சத்யா என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. இதில் ரவுடி பேபி என்கிற கதாபாத்திரத்தில் பாப் கட்டிங் செய்து கொண்டு செம கெத்தான ரோலில் நடித்திருந்தார் ஆயிஷா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலருடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம்ம Cute ஆக ஆடிய ஆயிஷா.! ஜோடி பொருத்தம் சூப்பர்..! 1

இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த சீரியலில் இரண்டு பாகங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஆயிஷா. பின்னர் ஜீ தமிழில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சுமார் 60 நாட்களுக்கு மேலாக அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் மக்கள் குறைந்த வாக்குகள் அளித்து ஆயிஷாவை வெளியேற்றினர். வெளியே வந்த பிறகு பேட்டிகள் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் ஆயிஷா, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது காதலரை அறிமுகப்படுத்தினார். யோகேஸ்வரன் என்கிற தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து காதலரை செம க்யூட்டாக அறிமுகப்படுத்தி இருந்தார். அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.


அதுபோல தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு தனது வருங்கால கணவருடன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்