லியோ முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய தளபதி.! வைரலாகும் வீடியோ இதோ.!

தளபதி 67 படமான லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது தளபதி விஜய் சென்னை திரும்பியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜயின் 67வது படமான லியோ படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக பல குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் அறிவிப்பு வெளியான பிறகு, படத்தின் டைட்டிலை ஒரு குட்டி டீசருடன் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் சாக்லேட் ஃபேக்டரி ஒன்றில் இருக்கும் விஜய் சாக்லேட்டையும், கத்தியையும் ஒருசேர செய்கிறார். அப்போது அந்த ஃபேக்டரியை எதிரிகள் சுற்றி வளைக்கின்றனர். உடனே கத்தியை எடுத்துக்கொண்டு அதை சாக்லேட் ட்ப்பில் நனைத்து பிளடி ஸ்வீட் என்று கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

லியோ முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய தளபதி.! வைரலாகும் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

இந்த டீசர் வெளியாகி நான்கு நாட்களில் சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்து இருந்தது. லோகேஷ் கனகராஜீன் யூனிவர்ஸ் இந்த படத்தில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 6 ஜனனி இருக்கிறார் என்றும், அவர் விஜய்க்கு மகள் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட அபிராமி வெங்கடாசலம் லோகேஷ் கனகராஜ் உடன் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதனால் அபிராமியும் தளபதி 67 படத்தில் இணைந்து இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

தொடர்புடையவை  தனது மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

லியோ முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய தளபதி.! வைரலாகும் வீடியோ இதோ.! 3

விளம்பரம்

ஆனால் எந்த தகவலும் கசிந்து விடாதபடி படக்குழு ரகசியம் காத்து வருகிறது. இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது விஜய் மீண்டும் சென்னைக்கே திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு முன்பு அங்கு நின்று இருந்த துப்புரவு பணியாளர்களை அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் தளபதி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment