பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஆயிஷா.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்துள்ளார் ஆயிஷா. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 65 நாட்கள் முடிந்துள்ளது. இதிலிருந்து தற்போது வரை 10 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த இரட்டை வெளியேற்றத்தில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர். தற்போது ஆயிஷா லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் ஆயிஷா. இவர் கேட்டரிங் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஆயிஷா.! 1
பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மாயா என்னும் சீரியலில் நடித்தார். இந்த சீரியலுக்கு பின்னர் ஜீ தமிழுக்கு சென்ற அவர் சத்யா என்கிற தொடரில் நடித்தார். இந்த தொடரின் சீசன் 1 சீசன் 2 இரண்டிலும் ரவுடி பேபி எனும் கதாபாத்திரத்தில் அவர் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் மீண்டும் ஜீ தமிழில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்தார் ஆயிஷா. வந்த நாள் முதலே இவர் போட்டியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். மேலும் இவரும் ஷெரினாவும் சேர்ந்து கொண்டு மலையாளத்திலேயே பேசி வந்தனர். விளையாட்டிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். ஷெரினா சென்றதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஆயிஷா. ஆனால் அதற்குள் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  கடைசியாக அமர்ந்திருந்த இரண்டு பேர்.! கார்டை காட்டிய கமல்.! வெளியேறியது யாருனு தெரியுமா?

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வந்த ஆயிஷா.! 3
வெளியே வந்த பிறகு முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கும் ஆயிஷா பிக்பாஸ் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த சீசனில் ஷிவின்தான் வெற்றியாளர் அவர் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அசீம் விக்ரமன் ஆகிய இருவரும் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள். அசீமிடம் என்ன சண்டை இருந்தாலும் அடுத்த நாள் அவர் முகத்தில் தான் முழிக்க வேண்டும் எனவே சண்டை எல்லாம் சகித்துக் கொண்டு தான் இருந்ததாகவும் அவர் பேசினார். அவர் பேசிய முழு வீடியோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment