ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் இவளவு தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

வெளியிட்டது

சோழ மற்றும் பாண்டிய வம்சத்தின் கதையாக ஈர்க்கப்பட்டு செல்வராகவனால் 2010 இல் இயக்கப்பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் அன்று பெரிய அளவில் ஹிட் ஆகாமல் இருந்தாலும் இன்று பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசன், ஆண்ட்ரியா என அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் இவளவு தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

இப்படத்திற்கு “சிறந்த திரில்லர் படத்திற்கான எடிசன் விருதும்” வழங்கப்பட்டது. பின்னர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன் கூறியுள்ளார். அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தற்போது செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஆயிரத்தில் ஒருவன் படம் மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து 32 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது என்று கூற முடிவு செய்தோம். ஆனால் இப்படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. எந்த சூழ்நிலையிலும் பொய் கூறக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்