Categories: சினிமா

படம் ரொம்ப நல்லா இருக்கு.! சசிகுமார் நடிப்பு வேற லெவல்.! அயோத்தி படத்தை புகழ்ந்த ப்ளூசட்டை மாறன்.!

வெளியிட்டது

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயோத்தி. இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். வாரணாசி பகுதியில் வாழ்ந்து வரும் ஹீரோயின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரைக்காக வருகிறார்கள். இதில் ஹீரோயின் அப்பா குடும்பத்தை அடிமைத்தனமாக வைத்திருக்கும், சடங்கு, சம்பிரதாயங்கள் என இருக்கும் ஒரு நபராக இருக்கிறார். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக ஒரு கார் டாக்ஸியை புக் செய்கிறார்கள். அந்த கால் டாக்ஸி உடன் அந்த ஹீரோயின் அப்பாவுக்கு சண்டை ஏற்படுகிறது. இதனால் அந்த கார் விபத்துக்கு உள்ளாகிறது. இதனால் ஹீரோயின் அம்மா சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதில் கார் டிரைவரின் நண்பர் தான் ஹீரோ சசிகுமார். அவர் தனது நண்பனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அங்கு வந்து பார்த்தபோது ஹீரோயின் அம்மா இறந்து விடுகிறார். மொழி தெரியாமல் திக்கற்று நிற்கும் குடும்பத்திற்கு ஹீரோ சசிகுமார் உதவி செய்ய முன் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் ரொம்ப நல்லா இருக்கு.! சசிகுமார் நடிப்பு வேற லெவல்.! அயோத்தி படத்தை புகழ்ந்த ப்ளூசட்டை மாறன்.! 1
இறந்தவரின் உடலை மீண்டும் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு விமானத்தில் அனுப்ப முடிவு செய்கின்றனர். ஆனால் விமானத்தில் அனுப்புவதற்கு முன்பு உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து ஏழு வகையான சான்றிதழ் பெற்றால் தான் விமானத்தில் அனுப்ப முடியும். ஆனால் ஹீரோவின் அப்பா போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்று சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் அந்த உடல் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டதா? பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. உண்மை கதையை மையப்படுத்தி எடுத்திருப்பதால் இந்த படம் ஒரு ஃபீல் குட் மூவி என்கிற உணர்வை நமக்கு தருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் தடங்கல்கள் நமக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. தேவையில்லாத வசனங்கள் பேசி ஹீரோயிசம் காட்டும் நாடகத்தனம் இல்லை. ஒரு பிற்போக்கான மனிதர் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்திற்குப் பிறகு எப்படி திருந்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் மிக அருமை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமாருக்கு நல்ல ஒரு படம் கிடைத்திருக்கிறது. இதில் ஹீரோயினாக நடித்தவரும் அவருக்கு அம்மவாக நடித்தவரும் நடிப்பு மிக அருமையாக இருந்தது.ஹீரோயின் அப்பாவாக நடித்தவர் தான் கதையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். மனிதத்தனத்திற்கும் மிருகத்தனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மிருகத்தனம் என்றால் நாய், பூனை எல்லாம் பிறந்ததிலிருந்து ஒரே குணத்தில் தான் இருக்கும். ஆனால் மனிதன் தான் பிறந்த பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்வான். ரோட்டில் ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உதவி செய்யும் இடத்தில் இருந்து தான் மனிதனுக்கு மாற்றம் கிடைக்கிறது. அப்படித்தான் மனிதத்தனம் வளரும் அதைத்தான் இந்த படம் காட்டி இருக்கிறது ஒரு மனிதன் அடுத்த மனிதனுக்கு உதவி செய்கிறான். அதைத்தான் ஹீரோயிசமாக காட்டி இருக்கிறார்கள். எதிரிகளை போட்டு அடிப்பதும் மிதிப்பதும் இல்லாமல் இவ்வாறாக ஹீரோயிசத்தை காட்டி இருக்கிறார்கள் இந்த படம் கண்டிப்பாக ஒரு ஃபீல் குட் மூவி என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனங்களை வைத்தார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்