சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான எதிர்நீச்சலில் வசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி நாயக் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதுதான் இன்றைய ஹாட் டாபிக் ஆகவும் இருக்கிறது. சன் டிவியில் குடும்பப் பாங்கான தொடர்கள் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

90களில் ஆரம்பித்த இந்த வழக்கம் இன்றளவும் நீண்டு கொண்டிருக்கிறது. பல தொடர்கள் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களாக மாறிப் போயிருக்கின்றன. தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இதில் நடிகை கனிகா, தேவதர்ஷினி, நடிகர் மாரிமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கோலங்கள் தொடரின் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் திருச்செல்வம். இதற்கு பின்னர் திருச்செல்வத்தின் தொடர்கள் அனைத்தும் மிகப் பிரபலமானது. அல்லி ராஜ்ஜியம், மாதவி, சித்திரம் பேசுதடி, போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களை திருச்செல்வம் இயக்கியிருக்கிறார். இந்த நாடகங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

மேலும் தொடர்ந்து பல நல்ல நாடகங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார் திருச்செல்வம். அப்பா மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த தொடர் பலராலும் விமர்சிக்கப்பட்டது. பல பிற்போக்கு வசனங்களும் காட்சிகளும் இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் தற்போது பெண் புரட்சி பற்றி பேசுவதால் இந்த சீரியலுக்கு பல இல்லத்தரசிகளும் ரசிகைகளாக மாறியுள்ளனர்.

இந்த சீரியலில் வசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி நாயக். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தனது காதலரை அவர் அறிமுகம் செய்துவித்துள்ளார்.

காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த அவர், கொஞ்சம் வேடிக்கையும் சிரிப்பும் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ன? பிறந்தநாள் பெண்ணுடன் விசேஷ நாளைக் கொண்டாடுவதில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். விளையாடுவது முதல் நண்பர்களுடன் பழகுவது வரை இது ஒரு கொண்டாட்டமாக இருந்தது! என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram