பிரசவ வலியால் துடித்த பாண்டவர் இல்லம் அனு.! தாயாக மாறிய கணவன்.! அனு பகிர்ந்த அழகிய வீடியோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் அனு தற்போது தனது மகனை பெற்றெடுப்பதற்கு முன்பு தான் வலியால் துடித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பின்பு அனுவிற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை காப்பி எடுத்து எடுக்கப்பட்டது என்று விமர்சனத்துடன் இருக்கும் ஒரு நாடகம்தான் பாண்டவர் இல்லம். ஐந்து மருமகள்களின் கதையையும், ஐந்து அண்ணன் தம்பிகளின் கதையையும் இந்த நாடகம் காட்டி வருகிறது. இதில் பாண்டவர் குடும்பத்திற்கும் ஜமீன் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பகையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக நடித்து வரும் இந்த தொடரில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை அனு. இவர் ஆரம்பத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசவ வலியால் துடித்த பாண்டவர் இல்லம் அனு.! தாயாக மாறிய கணவன்.! அனு பகிர்ந்த அழகிய வீடியோ.! 1
முதல் சீரியலிலேயே நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்தார். சிறந்த வில்லத்தனங்களை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தொடரில் சன் டிவிக்கு தாவிய அவர் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். பின்னர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருந்தது. இதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது. இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சமீபத்தில் பாண்டவர்களிடம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் அனு. இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆறு வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் வளைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். அனுவும் அந்தரத்தில் தொட்டிலில் அமர்ந்து கொண்டு இவர் வளைகாப்பு ஷூட்டிங் எடுத்திருந்தார். எந்த ஆடம்பரமும் இல்லாமல் வீட்டிலேயே வைத்து இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  ரேணுகா தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து வீட்டை விட்டு துரத்தும் ஞானம்.! ப்ரோமோ இதோ

பிரசவ வலியால் துடித்த பாண்டவர் இல்லம் அனு.! தாயாக மாறிய கணவன்.! அனு பகிர்ந்த அழகிய வீடியோ.! 3
இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பிரசவ அறையில் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் அவருக்கு ஜூஸ் அருந்த கொடுத்தும், முதுகை தட்டிக் கொடுத்தும் அணுவை தாயாக இருந்து பார்த்துக் கொள்கிறார். மேலும் குழந்தை பிறந்தவுடன் அதை கையில் வாங்கிய பின்பு இருவரும் கண்கலங்கி இருக்கின்றனர். அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அனு பகிர்ந்த அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது் நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment