எங்க போனாலும் ஒரே ரசிகர்கள் தான்.! கோஷம் போட கையோடு ஆட்களை அழைத்து செல்கிறாரா அசீம்?

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் அசீம் தற்போது போகும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடைய ரசிகர்களை கூடவே அழைத்துச் செல்வதாக தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை நெட்டிசன்கள் ஆதாரப்பூர்வமாக புகைப்படங்களுடன் பதிவிட்டு அசீமை தற்போது கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு மிகுந்த கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான ஒரு சீசன் என்றால் அது இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தான். இந்த சீசனில் தொடர்ந்து சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமலும் தரக்குறைவாகவும் பேசி வந்த ஒருவருக்கு டைட்டில் வழங்கப்பட்டதாக பிக்பாஸ் ரசிகர்களே குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இது தவறான முன்னுதாரணம் என்றும், விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது ஆதங்கங்களை கருத்துக்களாக இணையத்தில் கொட்டி தீர்த்து விட்டனர். ஆனால் சிலரோ அசீமின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வரவேற்பு நீண்டு கொண்டே வருகிறது.

எங்க போனாலும் ஒரே ரசிகர்கள் தான்.! கோஷம் போட கையோடு ஆட்களை அழைத்து செல்கிறாரா அசீம்? 1


செல்லும் இடங்கள் எல்லாம் அசீமிற்கு மிகுந்த வரவேற்கும் கிடைத்து வருகிறது. பிக்பாஸின் உண்மையான வின்னர் விக்ரமன்தான் என்றும், ஆனால் அசீமிற்கு தேவையில்லாமல் டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், டிஆர்பிக்காக இவ்வாறு நடத்தது என்று தொடர்ந்து கருத்துக்கள் நிலவிக் கொண்டே வருகிறது. பிக்பாஸ் முடிந்தும் இந்த பிரச்சனை தீர்ந்தபா டில்லை. இந்த நிலையில் அசீம் தன்னை தானே புகழ்ந்து பதிவு ஒன்றே போட்டிருந்தார் .அதில் விக்ரம் படத்தின் வரும் பல பேரின் முகமாக நின்னு ஆடுற புலி தானே என்கிற பாடலை போட்டு அவர் தனக்குத்தானே ஃபயர் விட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் சேர்த்து மக்கள் நாயகன் அசீம் போன்ற ஹேஷ் டேக்குகளும் ட்ரெண்டாக தொடங்கியிருந்தது. இன்னும் குறிப்பாக அப்யூசர்அசீம் என்கிற ஹேஷ்டேகும் கிளவுன் அசீம் என்கிற ஹேஷ்டேகும் இன்றளவும் டிரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அசீம் குறித்த ஒரு தகவலை பிரபல பிக்பாஸ் விமர்சகர் ஜான் மைக்கேல் பகிர்ந்து இருக்கிறார்.


அதில் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னுடைய ரசிகர்களையும் அழைத்துச் செல்வதாகவும், கோப்பையுடன் எங்கு சென்றாலும் செல்லும் அசீம் ஒரே ஆட்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்று புகைப்பட ஆதராங்களுடன் பதவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் எங்கு சென்றாலும் மாலை போடுவதற்கு ஆட்களையும் கூடவே கூட்டி சென்று விடுகிறீர்களா என்று கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே அசீன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. பி ஆர் டீமை வைத்து தான் இந்த வெற்றியை அவர் பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது மற்றும் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர் இதுபோல் செய்வது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது் நெட்டிசன்கள் அந்த புகைப்பட ஆதாரங்களை பகிர்ந்து அசீமை கலாய்த்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்