அயோ என்ன விட்ருங்க.! மௌன ராகம் சக்திக்கு மரண பயத்தை காட்டிய TTF வாசன்.! செம்ம காமெடி.!

தமிழ்நாட்டில் தற்போது டிடிஎஃப் வாசனை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலமாக இருக்கிறார். இவருடன் தற்போது மௌனராகம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ரவீனா தாஹா பைக் ரைடு சென்று இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 22 வயதாகும் டிடிஎஃப் வாசன், தனது பைக்கில் அதிவேகமாக சென்று சாகசங்கள் செய்து பல இளைஞர்கள் பட்டாளத்தை கவர்ந்து வைத்துள்ளவர் என்று சொன்னால் அது மிகையில்லை. இவருடைய youtube சேனலுக்கு மட்டுமே 35 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள், சமீப காலமாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறார் டிடிஎஃப் வாசன். அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். அவர் எங்கு சென்றாலும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவதால் குறுகிய காலத்திலேயே டிடிஎஃப் வாசன் மிகப் பிரபலமாக மாறினார். சமீபத்தில் கடலூரில் கடை திறப்பு விழாவிற்கு வந்த அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோ என்ன விட்ருங்க.! மௌன ராகம் சக்திக்கு மரண பயத்தை காட்டிய TTF வாசன்.! செம்ம காமெடி.! 1
மேலும் அதிவேகமாகவும் பைக்கில் ஒலி எழுப்பிக் கொண்டும் வந்ததால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் போலீசாரால் அடி வாங்கத் தொடங்கினர். தொடர்ந்து வழக்குகள் விசாரணைகள் என காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்கும் அலைந்து வருகிறார் வாசன். அப்படி கோர்ட்டுக்கு அலையும் போதிலும் கேஜிஎப் படத்தில் வரும் பிஜிஎம் ஐ போட்டுக் கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் தாங்க முடியாததாக இருந்தது. இதனால் இவரை கைது செய்ய வேண்டும் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை கொடுக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் வாசனுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். சமீபத்தில் வாசன் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவை அழைத்துக் கொண்டு அதிவேகமாக வண்டியை ஓட்டி சென்றார். பின்னால் இருந்த ஜி பி முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ வெளியான பிறகு பலரும் டிடிஎஃப் வாசனை திட்டத் தொடங்கினர். பின்னர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார் வாசன்.

விளம்பரம்
தொடர்புடையவை  விசித்ராவுக்கும் தினேஷுக்கு நீடிக்கும் மோதல்.! விசித்ராவை "திருடி" என அழைத்ததால் தொடரும் சண்டை.!

அயோ என்ன விட்ருங்க.! மௌன ராகம் சக்திக்கு மரண பயத்தை காட்டிய TTF வாசன்.! செம்ம காமெடி.! 3
தற்போது அதேபோல மௌன ராகம் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ரவீனாவை அழைத்துக் கொண்டு அவர் பைக் ரைடு போயிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஜி பி முத்து போலவே மிகுந்த வேகத்தில் சென்றதனால் ரவீனாவும் பயத்தில் அலறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் வாசன் திருந்தவே மாட்டார் போல என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Twin Throttlers

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment