ஆஜீத், கேபி, ஷிவானி எல்லாம் எதுக்கு பிக்பாஸ் வந்தாங்கன்னே தெரில.! அசீம் பேசும் வைரல் வீடியோ

வெளியிட்டது

பிக்பாஸ்ஸின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றி அசீம் பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு வலுவான போட்டியாளராக இருப்பவர் நடிகர் அசீம். விஜய் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி போன்ற பல டிவிகளில் நடிகராக நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் சிக்ஸ் ல் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசீம் தற்போது பிக்பாஸில் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்து வருகிறார். ஆரம்பம் முதலே ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார் அசீம். சக போட்டியாளர்களையும் மரியாதை குறைவாக நடத்துவது, வாடா போடா என்று ஒருமையில் பேசுவது, பெண்களை வாடி போடி என்று ஒருமையில் பேசுவது என்று தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஜீத், கேபி, ஷிவானி எல்லாம் எதுக்கு பிக்பாஸ் வந்தாங்கன்னே தெரில.! அசீம் பேசும் வைரல் வீடியோ 1

இந்த நிலையில் அவர் தற்போது சீசன் நான்கில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றி கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை பேசியிருக்கிறார். கொரோனா பரவல் இருந்த காரணத்தினால் சீசன் 4 மற்றும் 5 சரியாக போகவில்லை. குறிப்பாக விஜய் டிவியின் பிரபலங்களை வைத்து அந்த இரண்டு சீசன்களையும் விஜய் டிவி நடத்தி இருந்தது. இது அப்போதே பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக விஜய் டிவியில் இருந்து ஆஜித், கேபிரியல்லா, ஷிவானி நாராயணன் போன்ற பலர் கலந்து இருந்தனர். இவர்கள் அனைவருமே கன்டன்ட் கொடுக்காமல் இருந்தனர் என்று தற்போது அசீம் பேசியிருக்கிறார். ஆஜித் கேபி எல்லாம் ஒரு கண்டன்ட் கூட கொடுக்கவில்லை என்று அவர் பேசி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் ஷிவானி நாராயணனும் அசீமும் காதலித்து வருவதாக அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பகல் நிலவு என்கிற நாடகத்தில் நடித்து வந்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஷிவானி சீசன் 4 இருந்தபோதே அசீமும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் வரவில்லை. சீசன் 6ல் கலந்து கொண்ட பிறகு அசீம் சீசன் 4ல் கலந்து கொண்ட ஆஜித், கேபி ஷிவானி, ரியோ எதுவுமே செய்யவில்லை என்று பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரராகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.! Watch the below video.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்