பிள்ளைகளுடன் புது ஊரில் நடுத் தெருவில் நிற்கும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா ப்ரோமோ.!

பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. மனம் திருந்தி வந்த பாரதியை ஏற்றுக்கொள்ளாமல் கண்ணம்மா மற்றும் குழந்தைகள் தற்போது கண் காணாத இடத்திற்கு செல்கின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகன் பாரதிக்கு இரட்டை குழந்தைகள். ஆனால் அவர் இத்தனை காலமாக தனது தோழி வெண்பாவால் குழந்தை பிறக்காது என்று சொல்லி ஏமாற்றப்பட்டு வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கே இது தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பிள்ளைகளுடன் புது ஊரில் நடுத் தெருவில் நிற்கும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா ப்ரோமோ.! 1

விளம்பரம்

டிஎன்ஏ டெஸ்டில் அந்த இரண்டு குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று பாரதிக்கு தெரிய வருகிறது. இத்தனை நாள் குழந்தைகளையும் தனது மனைவியும் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று சொல்லி பாரதி கதறி அழுகிறார். மேலும் கண்ணம்மா காலில் விழுந்து இனிமேல் நாம் நால்வரும் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என்றும் கதறி அழுது கொண்டிருக்கிறார். ஆனால் கண்ணம்மாவோ முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். இத்தனை நாள் நாங்கள் சொல்லும்போது கேட்காமல், அப்போதெல்லாம் எங்களை அசிங்கப்படுத்திவிட்டு இப்பொழுது எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்டு கண்ணம்மா குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். தற்போது பாரதியும் அவரது குடும்பத்தினரும் கண்ணம்மாவை அழைத்துச் வர அவரது வீட்டிற்கு செல்கிறார்கள்.

தொடர்புடையவை  குறுக்க குறுக்க பேசிய புகழ்..! கடுப்பாகிய VTV.. நிகழ்ச்சியில் வெடித்த சண்டை

பிள்ளைகளுடன் புது ஊரில் நடுத் தெருவில் நிற்கும் கண்ணம்மா.! பாரதி கண்ணம்மா ப்ரோமோ.! 3

விளம்பரம்

ஆனால் அவர்களுடைய வீடு பூட்டி கிடக்கிறது. கண்ணம்மாவிடம் குழந்தைகள் உன்னை மதிக்காமல் அசிங்கப்படுத்தியவர்கள் யாருமே நமக்கு தேவையில்லை. நாம் எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு சென்று விடலாம் என்று கூறுகின்றனர். அதனால் கண்ணம்மாவும் பேருந்தில் குழந்தைகளுடன் கண்காணாத இடத்திற்கு கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு வரும் பாரதி பூட்டி கிடக்கும் வீட்டை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்ணம்மா தனது தந்தையை அழைத்துக்கொண்டு அவர் சொந்த ஊருக்கே சென்று விடுகிறார். இத்துடன் இந்த கதை முடிந்து பிள்ளைகள் வளர்ந்து சீசன் 2வாக எடுக்கப்படும் என்று பாரதி கண்ணம்மா ரசிகர்கள் தங்களது யூகங்களை கருத்துக்களாக தெரிவித்து வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment