தோனி தயாரிக்கும் முதல் படம்.! LGM படத்திலிருந்து “இஸ் கிஸ் கிஃபா” லிரிக்கல் வீடியோ வெளியானது.!

எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் தயாரித்து உருவாகி இருக்கும் எல்ஜிஎம் படத்தில் இருந்து “இஸ் கிஸ் கிஃபா” என்கிற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும் இந்த பாடலில் அவரே தோன்றி நடனமும் ஆடியிருக்கிறார். அந்த வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் lgm. இந்த படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்க தோனி உருவாக்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனமான “தோனி என்டர்டைன்மென்ட்ஸ்” நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தோனி தயாரிக்கும் முதல் படம்.! LGM படத்திலிருந்து "இஸ் கிஸ் கிஃபா" லிரிக்கல் வீடியோ வெளியானது.! 1
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் தோனி தயாரிக்க இருக்கும் முதல் படத்தை தமிழில் எடுத்தது தற்போது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாக்கள் சமீபத்தில் நடந்த நிலையில் தோனி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் தோனி யோகி பாபு உடன் இணைந்து கேக் வெட்டியும் மகிழ்ச்சியாக பேசியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து ட்ரைலர் வெளியாகி இருந்தது. ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நதியாவும், இவானா ஹரிஷ் கல்யாணிக்கு காதலியாகவும் நடித்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  உருட்டுக் கட்டையால் ஜீவானந்தமை தாக்கத் தொடங்கிய ரவுடிகள்.! நிலைகுலைந்து போன ஜீவானந்தம்.!

தோனி தயாரிக்கும் முதல் படம்.! LGM படத்திலிருந்து "இஸ் கிஸ் கிஃபா" லிரிக்கல் வீடியோ வெளியானது.! 3

அம்மாவுக்கும் காதலிக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு காதலனாக ஹரிஷ் கல்யாண் இருப்பது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தெரிந்தது. தன்னுடைய அம்மாவை புரிந்து கொள்ள வைப்பதற்காக இவானாவுடன் ஒரு சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த ட்ரெய்லர் நகர்ந்தது. இதனால் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இஸ் கிஸ் கிஃபா என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. வித்தியாசமான வரிகளுடன் சாண்டி மாஸ்டரின் குத்தாட்டத்தில் இந்த பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment