அம்மாடி ராதிகா! இப்படி அவசர பட்டுட்டியே.! ராதிகாவுக்கு அட்வைஸ் செய்த ராமமூர்த்தி தாத்தா.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவிடம் சென்று சில விஷயங்களை கூறுகிறார். இதனால் ராதிகாவுக்கு சற்று மனமாற்றம் ஏற்பட்டது போல் தெரிகிறது. இந்த கதையின் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவி பாக்யா. இரண்டாவது மனைவி ராதிகா. மூத்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார் கோபி. இந்த நிலையில் மூத்த மனைவி பாக்யாவின் மகளான இனியாவும், கோபியின் தந்தையான ராமமூர்த்தியும் இருவரும் கோபி வசிக்கும் இல்லத்திற்கே வந்து விட்டனர். தற்போது இவர்கள் இரண்டாவது மனைவி ராதிகாவுடன் சமாளித்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மாடி ராதிகா! இப்படி அவசர பட்டுட்டியே.! ராதிகாவுக்கு அட்வைஸ் செய்த ராமமூர்த்தி தாத்தா.! 1

விளம்பரம்

இரண்டாவது மனைவி ராதிகாவிற்கு அதிகமாக சமைக்க தெரியாது. இருப்பினும் இவர்களுக்காக இன்று முயற்சி செய்து ராதிகா சிக்கன் பிரியாணி சமைத்திருக்கிறார். அனைவரையும் சாப்பிட அழைக்கும் ராதிகா அனைவருக்கும் பிரியாணி பரிமாறுகிறார் அப்போதே பிரியாணி மிக நன்றாக இருப்பதாக இனியா, கோபி, ராமமூர்த்தி அனைவரும் புகழ்வது கூறுவது போல் கனவு கண்டு கொண்டே நிற்கிறார் ராதிகா. பின்னர் கனவு என்பதை உணர்ந்து அனைவரையும் மீண்டும் அழைத்து உணவு பரிமாறுகிறார். ஆனால் யாருமே எதுவுமே கூறாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் வலிய சென்று தனது மகள் மயூவிடம் உணவு நன்றாக இருக்கிறதா? என்று கேட்கிறார். அவரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். மீண்டும் கோபியிடம் கேட்கும் போது எனக்கும் பிடித்திருக்கிறது எந்த ஹோட்டலில் வாங்கினாய் என்று கேட்கிறார் கோபி.

தொடர்புடையவை  நீங்க ஜனனியை லவ் பண்றீங்களா? ஷோவில் அமுதவாணனை பார்த்து நேரடியாக கேட்ட நடிகை.!

அம்மாடி ராதிகா! இப்படி அவசர பட்டுட்டியே.! ராதிகாவுக்கு அட்வைஸ் செய்த ராமமூர்த்தி தாத்தா.! 3

விளம்பரம்

இதனால் ராதிகாவின் முகமே மாறிவிட்டது. ஆசையாக சமைத்து வைத்தால் எந்த ஹோட்டலில் வாங்கினாய் என்று கேட்டுவிட்டாரே என்று ராதிகாவின் முகம் வாடுகிறது. இதை புரிந்து கொண்ட ராமமூர்த்தி தாத்தா,ராதிகாவிடம் சென்று 25 ஆண்டுகளாக நளபாகம் சமைத்துக் கொடுத்த தனது சொந்த மனைவிக்கு துரோகம் செய்தவன் அவன், பாக்யாவிடம் ஒருமுறை கூட உணவு நன்றாக இருக்கிறது என்று சொன்னதேயில்லை உன்னிடம் எப்படி சொல்வான் என்று நீ எதிர்பார்க்கிறாய்? அவசரபட்டு ஏமாந்து விட்டாய் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் ராதிகாவிற்கு உண்மைகள் புரிய ஆரம்பிப்பது போன்று தெரிகிறது. நீங்களும் இந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment