விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சொன்ன வார்த்தைப்படி இரண்டு லட்ச ரூபாயை முதல் தவணையாக கொடுத்து கோபியின் முகத்தில் கரியை பூசி இருக்கிறார் பாக்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் வங்காள தொடர் ஒன்றை மறு உருவாக்கம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டதாகும். இந்த தொடரில் ஹீரோவாக கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும், பாக்யாவாக நடிகை சுசித்ராவும் நடித்து வருகின்றனர். இதில் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வசித்து வருகிறார் கோபி. தற்போது பாக்யா வீட்டில் புது பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது கோபி கட்டிய வீட்டில்தான் முதல் மனைவி பாக்யா மற்றும் கோபியின் தாய் தந்தை மகன்கள் என அனைவரும் வசித்து வருகின்றனர். கோபி அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு சிறிய வாடகை வீட்டை எடுத்து அதில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எழிலுக்கும் கோபிக்கும் நடந்த ஒரு சிறு பிரச்சினையில் கோபி இந்த வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறுகிறார், இல்லை என்றால் இன்றைய மார்க்கெட் விலை 70 லட்சத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் எழிலால் அந்த சவாலை எதிர் கொள்ள முடியவில்லை அவரால் அந்த வீடை வாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் எழில் அமிர்தா திருமண பிரச்சனையும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வந்த கோபி உடனே காலி செய்து விடுங்கள் என்று வீட்டில் உள்ள அனைவரையும் மிரட்டுகிறார். இதனால் கடுப்பான பாக்கியா உங்கள் இருபது லட்ச ரூபாயை முதல் தவணையாக ஆறு மாதத்திற்குள் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லுகிறார். ஆனால் வழக்கம் போல அவரால் இந்த பணத்தை கொடுக்க முடியாது என்று கோபி நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது முதல் தவணையாக 2 லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார் பாக்யா.
பாக்யா திருமண ஆர்டர்கள், சமையல் ஆர்டர்கள் ஆகியவற்றை எடுத்து அதன் மூலமாக வரும் பணத்தில் கோபியின் கடனை அடைக்க நினைக்கிறார். தற்போது அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திருமண ஆர்டர்கள் கிடைத்து இருக்கின்றது. அதனால் ஏகத்துக்கும் குஷியில் இருக்கும் பாக்யா பணம் வந்த உடனேயே கோபியின் கடனை செலுத்துகிறார். இதனால் ஈஸ்வரி பாட்டி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television