இயக்குனர் மோகன்ஜி யை தற்போது ஐயப்பன் ராமசாமி பேட்டி எடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக டிரெண்டாகி வருகிறது. இயக்குனர் மோகன் ஜியிடம் சில காட்டமான கேள்விகளுடன் பேட்டி எடுத்திருக்கிறார் ஐயப்பன் ராமசாமி. தமிழகத்தில் வளர்ந்து வரும் இளம் பத்திரிகையாளர்களில் ஒருவராக இருப்பவர் ஐயப்பன் ராமசாமி. இவர் அரசியல்வாதிகள், வைரல் நபர்கள், இணையத்தில் கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளான நபர்கள் என அனைவரையும் தனது காட்டமான பேட்டிகளால் நடுங்க வைத்து விடுவார். இந்த நிலையில் அவர் தற்போது பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜியை பேட்டி எடுத்திருக்கிறார். அதில் அவர் காட்டமான சில கேள்விகளை கேட்டிருக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தற்போது செல்வராகவனை வைத்து பகாசூரன் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பகாசூரன் திரைப்படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போதைய சமூகம் எப்படி மொபைல் போன்களால் சீரழிகிறது பெண்களை தவறாக வீடியோ எடுத்து எப்படி இணையத்தில் பதிவிடுகிறார்கள், அதனால் வரும் பிரச்சினைகள் என்ன. இதனால் பாதிக்கப்படும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது என்று பல விஷயங்களை பகாசூரன் படம் பேசியிருந்தது. ஆனால் சில பிற்போக்குத்தனமான கருத்துக்களும் இந்த படத்தில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மொபைல் போன்கள் பயன்படுத்துவது குற்றமில்லை அதை தவறாக பயன்படுத்துபவர்களை தான் தண்டிக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு பெண்களை ஒழுங்காக இருக்க வேண்டும், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்கிற பழைய பிற்போக்குத்தனங்களை வைத்துக்கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில் இன்று பிரபல நெறியாளர் ஐயப்பன் ராமசாமி மோகன் ஜியை பேட்டி எடுத்திருக்கிறார். அதில் அவர் ஏன் பெண்களை எப்பொழுதும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும் ஒப்பிட்டு படம் எடுக்கிறீர்கள். நீங்கள் என்ன நவீன பூமரா? பெண்கள் முன்னேற வேண்டும் என்று படத்தில் வசனங்கள் எடுத்துக்கொண்டு அதே படத்தில் ஐட்டம் சாங் வைத்திருக்கிறீர்களே இதெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என்பது போன்ற கேள்விகளை கேட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
Video Embed Code Credits: Trendglitz