பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புது என்ட்ரியாக உள்ளே வந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். அவருக்கும் பாக்யாவிற்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. பாக்கியலட்சுமி தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது பாக்யாவுக்கு புது ஜோடியாக நடிகர் ரஞ்சித் அறிமுகம் ஆகி இருப்பதாகவே தெரிகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. இதனால் ஐடி கம்பெனி கேன்டீன் காண்ட்ராக்ட் எடுக்க சென்ற பாக்யாவை அவரது கணவரின் இரண்டாவது மனைவி மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் எப்படியாவது பாக்யா ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் ஆங்கில பேச்சு வகுப்பிற்கு சென்றிருக்கிறார் பாக்யா. அங்கு அவர் வகுப்பிலும் இணைந்து விட்டார். இந்த செய்தியை வீட்டிற்கு வந்த அவர் செல்வி, ஜெனி, அமிர்தா, எழில் ஆகியோரிடம் கூறுகிறார். இந்த விஷயம் தனது மாமியார் ஈஸ்வரிக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில வகுப்புக்காக சென்ற பாக்யா போன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டி வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வரும் ரஞ்சித்தின் வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்து விடுகிறார். இதனால் கை மற்றும் கால்களில் காயம் ஏற்படுகிறது. கீழே விழுந்த வண்டியை எடுத்த கொடுத்து ரஞ்சித் பாக்யாவுக்கு உதவி செய்கிறார். மேலும் இருவருக்கும் அறிமுகமாகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரஞ்சித்தும் அதே ஆங்கில வகுப்பில் சேர்வதற்காக வந்திருக்கிறார். பாக்யாவும் அதே வகுப்பில் இணைந்திருக்கிறார். அப்போது வகுப்பில் இருக்கும் ஆசிரியர் பாக்யாவிடம் உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று கூற, பாக்யா எழுந்து தவறு தவறாக ஆங்கிலம் பேசுகிறார். இதை பார்த்து அருகில் இருக்கிறவர்கள் சிரிக்க தொடங்குகிறார்கள். இதனால் பாக்கியால் நிலை குலைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அதே வகுப்பில் இருக்கும் ரஞ்சித் பாக்யாவிற்கு ஆதரவாக பேசுகிறார்.
நாம் அனைவரும் இங்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள தானே வந்திருக்கிறோம், இதில் எதற்கு அடுத்தவர்களை பார்த்து சிரிக்கிறீர்கள்? பாக்யா நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள். தொடர்ந்து பேசுங்கள் என்று சொல்லி பாக்யாவிற்கு ஊக்கம் கொடுக்கிறார். இதனால் மனமகிழ்ச்சி அடையும் பாக்யா தொடர்ந்து பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கோபிக்கு போட்டியாக தற்போது பாக்யாவிற்கு ஜோடி ஒன்றை சீரியல் குழு இறக்கி இருப்பதாகவே தெரிகிறது. இது கெஸ்ட் ரோலா அல்லது தொடர்ந்து இந்த கதாபாத்திரம் கதை முழுக்க வருகிறதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமாவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television