பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து தற்போது நடிகை ஒருவர் விலகியுள்ள செய்தி கிடைத்துள்ளது. அவரை பாண்டவர் இல்லம் சீரியலின் நடிகர்கள் அனைவரும் பிரியாணி விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ள வீடியோவை அந்த சீரியலில் நடித்து வரும் கிருத்திகாவே வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் கடந்த முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1. 30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பாண்டவர் குடும்பம் வெர்சஸ் ஜமீன் குடும்பம் என்ற இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையை மையமாக வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்கிற சீரியலில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரமாக வில்லியாக நடித்தார். இதில் சிறப்பான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தொடராக சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்கிற தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தார். தற்போது இவர் மனம் திருந்தி பாசிட்டிவ் ரோலாக மாறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் இவருக்கும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நடிகை அனு. 7 மாதமாக இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களை சமீபத்தில் அனு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அனுவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்து இருந்தது.

குழந்தை பிறந்த காரணத்தினால் அனு தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் இருந்து விலகியுள்ளார். சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்த அனுவுக்கு சர்ப்ரைஸ் செய்யும் விதமாக பாண்டவர் இல்லம் சீரியலின் நடிகர்கள் அனைவரும் பிரியாணி விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பாண்டவே இல்லம் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கிருத்திகாவே வெளியிட்டுள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Krithika Annamalai