என்ன கேள்வி கேட்க நீங்க யாரு? உங்கள பாத்தாலே புடிக்கல.! ராதிகாவை வச்சி செய்த இனியா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவுக்கும் ராதிகாவுக்கும் சண்டை தொடங்கியுள்ளது. அந்த சண்டை பெரிதாகி, இனியா கோபியிடம் நான் வேண்டுமா? இல்லை ராதிகா வேண்டுமா என்று கேள்வியை கேட்கிறார். இதனால் கோபி ராதிகா உள்ளிட்ட அனைவரும் உறைந்து போய் நிற்கின்றனர். இனியா பாக்கியாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி கோபியுடன் வந்துவிட்டார். கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகா மற்றும் அவரது குழந்தை மயூவுடன் வசித்து வருகிறார். இனியாவுக்கு ராதிகாவை சுத்தமாக பிடிக்காது. அவருடன் பேசுவதே இல்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இனியா ராதிகாவை பார்த்து உங்களை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று சண்டை போடுகிறார். இனியாவிற்கு காபியை குடிக்க பிடிக்காது. அவர் பால் மட்டும்தான் குடிப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன கேள்வி கேட்க நீங்க யாரு? உங்கள பாத்தாலே புடிக்கல.! ராதிகாவை வச்சி செய்த இனியா.! 1

இந்த விஷயத்தை ஏற்கனவே ராதிகாவிடம் கோபி எடுத்துக் கூறி இருக்கிறார். ஆனாலும் இன்று மீண்டும் ராதிகா இனியாவுக்கு காபி போட்டு கொடுத்திருக்கிறார். இனியா மயூவுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .அப்போது ராதிகா காபியை கொண்டு வந்து இனியா முன்பு வைக்கிறார். ஆனால் இனியா அந்த காபியை குடிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காபி அப்படியே இருந்ததால், ராதிகா கோபமாக ஏன் காப்பியை குடிக்காமல் அப்படியே வைத்திருக்கிறாய் என்று கேட்க, இனியாவுக்கும் ராதிகாவிற்கும் சண்டை ஏற்படுகிறது. எனக்கு காபி பிடிக்காது. உங்களையும் எனக்கு பிடிக்கவில்லை என்று இனியா ராதிகாவின் முகத்தில் அடித்தார் போல் கூறுகிறார். இதனால் சண்டை பெரிதாகிறது.

அப்போது அங்கு வரும் கோபி என்ன நடந்தது என்று கேட்கிறார். அப்போது இனியா இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, இவர்களுக்காக என்னிடம் நீங்கள் சண்டை போட போகிறீர்களா? இப்போது சொல்லுங்கள் நான் வேண்டுமா இல்லை? இந்த ராதிகா வேண்டுமா? என்று கோபியிடம் கடுமையாக கேள்விகளை கேட்கிறார் இனியா. இதனால் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் கோபி. இனிய கேட்ட கேள்வியால் ஆடிப் போய் நிற்கிறார் ராதிகா. இனிமேல் ஆட்டம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. அந்தப் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்