நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் இறப்பு.! ஓடி வந்து ஆறுதல் சொன்ன ராதிகா, குஷ்பூ, மீனா.!

நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. 1970 மற்றும் 80 களில் முண்ணனி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் 1974ம் ஆண்டு முருகன் காட்டிய வழி என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரஜினி, கமல் என பல முண்ணனி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். நீயா போன்ற ஒரு சில படங்களையும் தயாரித்து இருக்கிறார். தற்போது அரசியல்வாதியாகவும் இருக்கிறார் ஸ்ரீபிரியா.

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் இறப்பு.! ஓடி வந்து ஆறுதல் சொன்ன ராதிகா, குஷ்பூ, மீனா.! 1
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பாளராகவும் இருக்கிறார். ஸ்ரீபிரியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை இவரின் தந்தை காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளை ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார். அவரது மனைவி கிரிஜா பக்கிரிசாமியும் பரதநாட்டியக் கலைஞர் ஆவார். ஸ்ரீபிரியாவுக்கு மீனாட்சி மற்றும் ஸ்ரீகாந்த் என்று இரண்டு உடன்பிறந்தவர்கள் உண்டு. இவர் 1988ம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்ற நடிகரை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு சினேகா, நாகார்ஜூனா என்ற இரண்டு பிள்ளைகளும் உண்டு. இது மட்டுமில்லாமல் பிண்ணனி பேசுவது, நாடகங்கள் மற்றும் படங்கள் இயக்கவது, தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பது என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் ஸ்ரீபிரியா. ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'தலைவர்170' படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த நடிகை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயார் இறப்பு.! ஓடி வந்து ஆறுதல் சொன்ன ராதிகா, குஷ்பூ, மீனா.! 3

இந்த நிலையில் அவரது தாயாரின் உயிர் இன்று காலை பிரிந்தது. மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஸ்ரீபிரியாவின் தோழிகளான குஷ்பூ, ராதிகா, மீனா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடலைப்பார்த்து ராதிகா கதறி அழுதார். அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுத அவரை அவரது மகள் ராயான் தேற்றினார். Watch the below Video.!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment