எல்லாருக்கும் ரொம்ப நன்றி, குழு புகைப்படத்தை பகிர்ந்து பாக்கியா போட்ட பதிவு, என்ன ஆச்சுன்னு தெரியுமா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடராக இருக்கும் பாக்கியலட்சுமி தற்போது 600 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண குடும்பத் தலைவி படும் துன்பங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தொடர். இந்த தொடரை ஆரம்பம் முதலே பலரும் விரும்பி பார்க்கத் தொடங்கினர். அதற்கு முக்கிய காரணம் இதில் கதாநாயகியாக நடிக்கும் பாக்கியாவின் எதார்த்தமான நடிப்புதான். நம் வீடுகளில் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கும் அம்மாவின் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதால் இவருக்கும், இந்த நாடகத்திற்கும் பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் மெல்ல மெல்ல இந்த கதை வழக்கமான இரண்டு மனைவி கதையாக மாறியது.

எல்லாருக்கும் ரொம்ப நன்றி, குழு புகைப்படத்தை பகிர்ந்து பாக்கியா போட்ட பதிவு, என்ன ஆச்சுன்னு தெரியுமா? 1

இதில் கதாநாயகனாக வரும் கோபி, தனது கல்லூரி கால தோழியான ராதிகாவை மீண்டும் சந்திக்கிறார். அங்கிருந்து தான் பிரச்சினை வெடித்தது. ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அந்த திருமணத்தில் பிரச்சனை இருந்ததால் அவரும் அவரது மகளும் தனியாக வாழ்ந்து வருவது போல காட்டப்பட்டது. இதனால் ராதிகாவை மறு திருமணம் செய்து கொள்ள கோபி விரும்புகிறார். இது ஒரு ஹிந்தி தொடரின் தமிழ் ரீமேக் ஆகும். ஏற்கனவே இந்தி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தை கோபி திருமணம் செய்து கொள்வதாகவும், பாக்கியா கதாபாத்திரம் தனியாக எவ்வாறு வாழ்க்கையை நடத்துகிறார் என்பது போலவும் கதை நகர்ந்தது. ஆனால் தமிழில் இது எவ்வாறு செல்லும் என்று தெரியவில்லை. தற்போது தான் பாக்யா ராதிகா மற்றும் கோபியின் கள்ள உறவை கண்டுபிடித்திருக்கிறார். இதனால் இந்த கதையை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. டிஆர்பி ரேட்டிங்களும் இந்த தொடர் முதலிடத்தில் இருந்தது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் 600 எபிசோடுகளை கடந்து விட்டது. இதை பாக்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நாடகத்தில் நடிக்கும் அனைவரும் இருக்கிறார்கள், ஒட்டுமொத்த பாக்கியலட்சுமி டீமும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இதில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமரா மேன், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் பாக்யா தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார் மேலும் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்