பலரின் மனங்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ். இது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். முன் பின் அறிமுகம் இல்லாத 16 நபர்களை கொண்டு வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல், 100 நாட்கள் அவர்கள் எவ்வாறு இதில் சமாளிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது தமிழில் ஐந்து சீசன்களை கடந்து விட்டது. இந்த ஐந்து சீசன்களையுமே உலகநாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இந்த பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகும் தகவலின் படி அக்டோபர் இரண்டாம் தேதி பிக்பாஸ் சீசன் 6 வெளியாகும் என்று தெரிகிறது. அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் மும்முரத்தில் பிக்பாஸ் குழு இறங்கி இருக்கிறது. பிக்பாஸின் முதல் மூன்று சீசன்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. மக்களும் இதை விரும்பிப் பார்த்தனர்.

ஆனால் சீசன் 4 மற்றும் 5 மிகப்பெரிய அடி வாங்கியது. அதற்கு காரணம் கொரோனா தான். கொரோனா காரணமாக விஜய் டிவியின் பிரபலங்களையே உள்ளே இறக்கி இருந்தது பிக் ழபாஸ் டீம். இதனால் மிக சுவாரஸ்யம் குறைவாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும் பிக்பாஸ் அல்டிமேட் என்று 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பியது. இதில் கடந்த ஐந்து சீசங்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் இதுவும் சுவாரஸ்யம் குறைந்ததாகவே இருந்தது. மேலும் இதை தொகுத்து வந்த கமல் பாதியில் இதிலிருந்து வெளியேறினார். இதனால் மேலும் பிக்பாஸ் அல்டிமேட் மீதான ஆர்வம் குறைந்தது. தற்போது சீசன் 6 துவங்க இருப்பதால் மிக கவனமாக போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். கடந்த இரு சீசங்களில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் போல் அல்லாமல் சர்ச்சையான போட்டியாளர்களையே தேர்வு செய்ய இந்த குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே குக் வித் கோமாளி ரக்ஷன் மற்றும் அஸ்வின், பின்னணிப் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி, பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி பிரபலம் டிடி ஆகியோர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. சர்ச்சைக்கு பெயர் போன சின்னத்திரை நடிகை ஆன ஸ்ரீநிதியும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ந்து வரும் குக் வித் பிரபலம் தர்ஷா குப்தாவும் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது எதுவுமே அதிகாரப்பூர்வமற்ற தகவல் தான். விரைவில் இவர்களின் பட்டியலுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
