எப்படி பாக்கியா இவளோ அழகா இருக்கீங்க? கடலை போடும் பழனிசாமி..! அதிர்ச்சியில் உறைந்த கோபி.!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யாவின் ஈஸ்வரி கேட்டரிங் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பழனிச்சாமி பாக்யாவிடம் பேசிக் கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார். மேலும் பாக்யா ஆங்கில வகுப்பிற்கு செல்வது மாமியார் ஈஸ்வரிக்கு தெரிந்து அவர் கோபத்துடன் வெளியேறுகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஐடி கம்பெனியின் கேண்டீன் காண்ட்ராக்ட்டை எடுத்திருக்கிறார் பாக்யா. அதே கம்பெனியில் HR ஆக வேலை பார்த்து வரும் ராதிகா இந்த ஆர்டரை எப்படியாவது பாக்யாவிற்கு கொடுக்க விடாமல் செய்துவிட வேண்டும் என்று பல சதி திட்டங்கள் தீட்டுகிறார். ஆனால் அதை அனைத்தையும் முறியடித்து கேன்டீன் காண்ட்ராக்டை பிடித்திருக்கிறார் பாக்யா. இந்த நிலையில் கேண்டினை சும்மா திறக்க வேண்டாம், ஒரு பூஜை செய்து திறக்கலாம் என்று அவரது மருமகள் ஐடியா கொடுக்க அதன்படியே பூஜை செய்து திறப்பு விழா போல ஏற்பாடு செய்திருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி பாக்கியா இவளோ அழகா இருக்கீங்க? கடலை போடும் பழனிசாமி..! அதிர்ச்சியில் உறைந்த கோபி.! 1
இந்த விழாவிற்கு திருமண மண்டபத்தின் ஓனர், ஐடி கம்பெனியின் ஓனர், ராதிகா, தனது மாமியார், மாமனார், குடும்பம் என அனைவரையும் அழைத்துச் செல்கிறார் பாக்யா. இதில் மாமியார் ஈஸ்வரி நான் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரும் இந்த திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார். மேலும் கோபியும் அப்படியே பாக்யாவின் கேண்டீன் திறப்பு விழாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் சில நாட்களாக பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் அவரது மாமியார் ஈஸ்வரிக்கு தெரியாது. இந்த நிலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் இருந்து பாக்யாவின் நண்பர்கள் அனைவரும் கூட்டமாக பாக்யாவின் கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கின்றனர். அங்கு பழனிச்சாமி பாக்யாவிடம் உங்களுக்கு 30 வயது இருக்குமா? நீங்கள் பார்க்க இளமையாக இருக்கிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த கோபி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிடியை இறுக்கும் பிக்பாஸ்.! தொடர்ந்து தோல்வியை தழுவும் ஹவுஸ்மேட்ஸ்.! வைல்ட் கார்டு உறுதி போலயே.!

எப்படி பாக்கியா இவளோ அழகா இருக்கீங்க? கடலை போடும் பழனிசாமி..! அதிர்ச்சியில் உறைந்த கோபி.! 3

அதற்கு அடுத்தபடியாக ஈஸ்வரி ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நண்பர்களை பார்த்து இவர்களெல்லாம் யார் என்று கேட்க, பாக்கியலட்சுமி பதில் சொல்ல முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா குறுக்கிட்டு அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்கிறார்களே அங்கு அவருடன் படிக்கும் தோழர்கள் இவர்களெல்லாம் என்று கூறுகிறார். அப்போது ஈஸ்வரி எது ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போறியா என்று கோபத்துடன் அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment