நீ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை நான் உனக்கு போட்ட பிச்சை.! ராதிகாவை வெளுத்து வாங்கிய பாக்யா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா மற்றும் பாக்யாவிற்கு கடுமையான சண்டை எழுந்து இருக்கிறது. இருவரும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக் கொள்கின்றனர். ராதிகாவை பார்த்து பாக்யா, “நான் வேண்டாம் என்று தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாய்” என்று கோபமாக கூறுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபி முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். அங்கிருந்து பிரச்சினைகள் ஆரம்பமாக தொடங்குகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்த நாள் முதல் கோபிக்கு சுத்தமாக நிம்மதியே இல்லை் தினமும் சண்டை சச்சரவு என்று போய்க்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கை நான் உனக்கு போட்ட பிச்சை.! ராதிகாவை வெளுத்து வாங்கிய பாக்யா.! 1

கோபியின் மூத்த மனைவிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் இரண்டு மகன்களுக்கு திருமணமே ஆகிவிட்டது. மூன்றாவது ஆக கடைக்குட்டி இனியாவை கோபிக்கு மிகவும் பிடிக்கும். இனியாவிற்கும் பாக்யாவிற்கும் சண்டை ஏற்பட்டதால் இனியா பாக்யாவிடம் இருந்து விலகி கோபியும் இடம் வந்து சேர்ந்திருந்தார். ஆனால் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் இனியாவிற்கும் எப்பொழுதும் சண்டை சச்சரவு என்று இருந்து கொண்டே இருந்தது. இதனால் கடுப்பான இனியா மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் இனியா கோபியை வெறுத்து தனது தாய் பாக்யாவுடன் சென்று விட்டார். இங்கிருந்து மீண்டும் பிரச்சினைகள் ஆரம்பமானது. இனியா தன்னை வெறுப்பதற்கு ராதிகா தான் காரணம் என்று சொல்லி கோபி ராதிகாவிடம் சண்டை போடுகிறார். மேலும் அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார். அந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் கோபி.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோவிலுக்கு சென்றுள்ள கோபியை அவர் தாய் ஈஸ்வரி சந்தித்து ராதிகா உனக்கு வேண்டாம் நீ திரும்பி பழையபடி நம்ம வீட்டிற்கு வந்துவிடு என்று சொல்கிறார். இதை மறைந்திருந்து ராதிகா கேட்கிறார். மேலும் வேலைக்கு செல்லும் ராதிகா அங்கு கேண்டினுக்கு சென்று பாக்யாவிடம், உன் மாமியார் மீண்டும் கோபியை உங்கள் வீட்டிற்கு வரச் சொல்கிறார்? என்ன மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமா? என்று கேள்வியாகவும் கோபத்துடன் கேட்கிறார். அதற்கு கருப்பான பாக்யா நான் போட்ட வாழ்க்கையில்தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று கோபத்துடன் பதில் அளிக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்