ஸ்ருஷ்டி போல கெட்டப் போட்டு ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட குரேஷி..!

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு தற்போது குரேஷியும் நடனமாடி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த குரேஷி தனது திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து இருக்கிறார். பல லட்சியங்கள் மற்றும் கனவுகளோடும் சென்னைக்கு வேலை தேடி வந்த குரேஷி பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைத்ததால் தனது மிமிக்ரி திறமையை பயன்படுத்தி விஜய் டிவிக்குள் நுழைந்தார். கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆனார். வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது பலரும் அவரை விமர்சித்திருந்தனர். அவருக்கு மிமிக்கிரி கூட சரியாக வராது அவரை தேர்ந்தெடுத்தது முறையற்றது என்று பலரும் குரேஷியை விமர்சித்து இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருஷ்டி போல கெட்டப் போட்டு ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட குரேஷி..! 1
ஆனால் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குரேஷி அந்த விமர்சனங்களை முழுவதுமாக மாற்றி இருக்கிறார். சீசன் 3 முதல் கோமாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் தற்போது சீசன் 4ல் முக்கிய கோமாளியாக இருக்கிறார். இவர் வெங்கடேஷ் பட்டுடன் இணைந்து செய்யும் காமெடிகள் ரசிக்கும்படியாகவும் மிகுந்த சிரிப்பையும் வரவழைப்பதாகவும் இருக்கிறது. பாலா மற்றும் மணிமேகலை இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் புகழ் மற்றும் குரேஷி இருவரும் தான் இந்த நிகழ்ச்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர் செய்யும் சேட்டைகளும் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் அனைவரும் குக்குகள் போல கெட்டபுடன் உடை அணிந்து வந்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  என் கண்ணை பார்த்து ஐ லவ் யூ சொல்லு ஜீவா.! ப்ரியாவிடம் முதல் முறையாக காதலை சொன்ன ஜீவா.!

ஸ்ருஷ்டி போல கெட்டப் போட்டு ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட குரேஷி..! 3
அந்த வகையில் குரேஷியும் நடிகை சிருஷ்டி போல கெட்ட போட்டு வந்திருக்கிறார். இந்த கெட்டப்பை பார்த்த பின்பு பலரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றனர். மேலும் கெட்டப் போட்ட உடனேயே அவர் தசரா படத்திலிருந்து மைனர் வேட்டி கட்டி என்கிற பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பலரும் அந்த வீடியோவுக்கு லைக்குகளை போட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment