பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குடித்துவிட்டு நடுரோட்டில் உருண்டு கொண்டிருக்கும் கோபியை அவரது மகன் செழியன் மீட்டு பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இவரை ஏன் இங்கு அழைத்து வந்தாய் என்று எழில் செழியனிடம் சண்டை போட, அதற்கு கோபமான ஈஸ்வரி பாட்டி இனிமேல் கோபி இங்கு தான் இருப்பான் என்று பதில் அளிக்கிறார். இதனால் வீட்டில் மீண்டும் சண்டை பூதாகரமாக வெடிக்கும் என்று தெரிகிறது. இந்த காட்சிகளை எல்லாம் பார்க்கும் பாக்யா மனம் உடைந்து போய் மூலையில் நின்று கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல்தான். இந்த சீரியலின் ஹீரோ கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்யாவுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகாவுடன் திருமணம் ஆன நாள் தொடங்கி ஏதாவது சண்டை சச்சரவு என்று தொடர்ந்து மன நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார் கோபி. இந்த சண்டை உச்சகட்டத்தை எட்ட ராதிகா தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்பொழுது ரோட்டில் ராதிகா கை, காலில் விழுந்து அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் கோபி. ஆனால் இதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. மேலும் மன நிம்மதி இல்லாமல் இருக்கும் கோபி அதிகமாக சாராயம் குடித்து நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார். அவரின் மொபைல் போனை எடுத்து ஒருவர் பாக்யாவிற்கு கால் செய்து சொல்ல பாக்கியாவும் எழிலும் சென்று அவரை மீட்டு ராதிகாவின் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். தொடர்ந்து இதுபோலவே குடித்துவிட்டு ரோட்டில் உருளும் கோபி தற்போது மீண்டும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டில் கிடக்கிறார். அதை பார்த்த செழியன் அவரை மீட்டு பாக்யா இருக்கும் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது எழில் இவரை எதற்கு நம்ம வீட்டிற்கு அழைத்து வந்தாய் என்று செழியன் இடம் சண்டை போடுகிறார்.
இப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற ஈஸ்வரி பாட்டி ஆயிரம் இருந்தாலும் இது இவனுடைய வீடு தான். இவன் இனிமேல் இங்கேதான் இருப்பான் என்றும் கோபியை அவரது அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைக்குமாறும் கூறுகிறார். குடிபோதையில் இருக்கும் கோபி என்ன நடக்கிறது என்று தெரியாமல் செழியன் மீது சாய்ந்து கிடக்கிறார். அப்போது பாக்கியா கலங்கிய கண்களுடன் மூலையில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். மற்ற அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கிறனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television