ஜெனி மீது பாத்திரங்களை தூக்கி வீசி அராஜகம் செய்த ராதிகா.! கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவின் அடுப்பங்கரையில் ராதிகா புகுந்து சாமான்களை எல்லாம் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி ராதிகாவை வெளியே போடி என்று கோபமாக கத்துகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்யாவிற்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்களை தனியாக விட்டு விட்டு இரண்டாவது மனைவி ராதிகாவிடம் சென்று விட்டார் கோபி. தற்போது கதைப்படி ராதிகாவிடம் படாத பாடு பட்டு கொண்டிருக்கும் கோபி. அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். மேலும் தனது மூத்த மனைவியாக இருக்கும் பாக்யாவின் வீட்டிற்கே வந்து விடுகிறார். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போதும் பாக்யாவைத்தான் கோபியின் பெற்றோர்கள் மருமகளாக பார்க்கின்றனர். ராதிகாவை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதனால் ராதிகா மிகுந்த கடுப்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெனி மீது பாத்திரங்களை தூக்கி வீசி அராஜகம் செய்த ராதிகா.! கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.! 1

கோபி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டில் கிடப்பதை பார்த்துவிட்டு பொறுக்க முடியாத கோபியின் தாயார் அவரை மீட்டு பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் கோபி இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன் என்று சொல்லி ராதிகாவும் பாக்யாவின் வீட்டிற்கு கிளம்பி வந்து விடுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் எவ்வளவோ எதிர்த்தும் ராதிகாவை வெளியே அனுப்ப முடியவில்லை. ராதிகாவின் தாயாரோ முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சட்டபூர்வமாக ராதிகாவை இவர் திருமணம் செய்திருக்கிறார். நீங்கள் மட்டும் ராதிகாவை இந்த வீட்டில் சேர்க்கவில்லை என்றால் நாங்கள் போலீசில் புகார் செய்வோம் என்று சொல்லி பாக்யாவின் வீட்டில் இருக்கும் அனைவரையும் மிரட்டுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் கோபியும் ராதிகாவும் பாக்யாவின் வீட்டில் இருக்கின்றனர். இனியாவின் அறையை கோபியும் ராதிகாவும் பயன்படுத்திக் கொள்வதால் இனியா பாக்யாவின் அறையில் இருக்கிறார்.


இதனால் தூங்குவதற்கு அறை கூட இல்லாமல் தவிக்கும் பாக்யா வீட்டின் நடு ஹாலில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் சாப்பாடு தொடங்கி அனைத்திலும் பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது சமயலறைக்கு வரும் ராதிகா நான் சமைக்க வேண்டும் என்று சொல்லி செல்வியிடம் இருந்து பாத்திரங்களை பிடுங்குகிறார். மேலும் கோபத்தில் பாத்திரங்களை தூக்கி ஜெனி மீது எறிகிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி எங்கள் சமையலறைக்கு வந்து நீ என்ன அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்க..? வெளிய போடி என்று சொல்லி கோபமாக கத்துகிறார் இதனால் அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்