நடனம் ஆடும் போது தவறி விழுந்த ஐஸ்வர்யா.! வயிற்றில் விழுந்த பலமான அடி.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ய நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் அப்போது தெரியாமல் ஐஸ்வர்யா தவறி கீழே விழுகிறார். கர்ப்பமாக இருக்கும் அவரின் வயிற்றில் சரியான அடி ஏற்படுகிறது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். கையில் காசு இல்லாமல் மனைவிக்கு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று தெரியாமல் கண்ணன் நிலை குலைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒரு முக்கியமான தொடராக இருந்து வருகிறது. தற்போது இந்தத் தொடர் வருகிற ஜூன் மாதத்துடன் நிறைவடைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பல கட்ட திருப்பங்களுடன் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கதைப்படி குடும்பம் மூன்றாக உடைந்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடனம் ஆடும் போது தவறி விழுந்த ஐஸ்வர்யா.! வயிற்றில் விழுந்த பலமான அடி.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவா தனக்கு குடும்பத்தில் மரியாதை தரவில்லை, நான் சம்பாதிக்கவில்லை என்று அண்ணன் தம்பிகளே தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று சொல்லி வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் பஞ்சம் அடைந்திருக்கிறார். அதேபோல கடைசி தம்பியாக இருக்கும் கண்ணன் வங்கி வேலைக்கு சென்று இருக்கிறார். அவர் 40,000 சம்பளத்தை மறைத்து 17 ஆயிரத்து வீட்டிற்கு கொடுத்துவிட்டு மீதியை தானே வைத்துக் கொள்கிறார். பின்னர் மொய் எழுதும் பிரச்சனையில் அவருக்கும் அண்ணன் தம்பிகளுக்கும் பிரச்சினை ஏற்பட அவரும் வீட்டிலிருந்து வெளியேறி தனது மனைவியுடன் சென்று விட்டார். தனியாக வீடு எடுத்து வசித்து வரும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அனைத்து பணத்தையும செலவழித்து விட்டனர். அவர்களிடம் தற்போது பணம் சுத்தமாக கையில் இல்லை் பேங்க் அக்கவுண்டில்லும் பணம் இல்லை.

தொடர்புடையவை  சுடருக்கு சிலம்பம் சொல்லி கொடுக்க மீண்டும் அபியின் வீட்டுக்கு வந்த வெற்றி.! வேற லெவல் ப்ரோமோ.!

நடனம் ஆடும் போது தவறி விழுந்த ஐஸ்வர்யா.! வயிற்றில் விழுந்த பலமான அடி.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 3

விளம்பரம்

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யாவும் கண்ணனும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக மொபைல் போனில் ரெக்கார்டு செய்து கொண்டு நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தெரியாமல் தவறி ஐஸ்வர்யா கீழே விழுந்து வயிற்றில் பலமாக அடிபடுகிறது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார் கண்ணன். அங்கு மருத்துவர்கள் உடனடியாக மருந்துகளை வாங்கித் தருமாறு சொல்கின்றனர். அதற்காக தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து கொடுக்கிறார். ஆனால் கார்டில் பணம் இல்லை, அனைத்து பணத்தையும் வீட்டிற்கு பொருள் வாங்குவதற்காக கண்ணன் செலவழித்து விட்டார். இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் கண்ணன். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் தேவை இல்லாமல் ஆடம்பரம் செலவு செய்து விட்டு இப்போது மருத்துவ செலவிற்கு காசு இல்லாமல் தவிக்கிறாயே முட்டாள் என்று கண்ணனை திட்டி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment