I Love You பாக்யா.! கோபி முன்னாலேயே பாக்யாவிடம் தனது காதலை சொன்ன பழனிச்சாமி.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமியைத். தேடி ஆங்கில வகுப்பிற்கு கோபி வந்து கொண்டிருக்கிறார் அப்போது அங்கு பாக்யாவும் பழனிச்சாமியும் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பழனிச்சாமி பாக்யாவிற்கு ஐ லவ் யூ என்று சொல்லி ப்ரொபோஸ் செய்கிறார். அதை பார்த்த கோபி நெஞ்சு வெடித்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கோபியின் நடிப்பு மிக காமெடியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

I Love You பாக்யா.! கோபி முன்னாலேயே பாக்யாவிடம் தனது காதலை சொன்ன பழனிச்சாமி.! 1

கோபி தனது மூத்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்த போதிலும் அவருக்கு அவர் பாக்யாவிடம் எப்பொழுதும் ஒரு வன்மம் இருந்து கொண்டே இருக்கிறது. பாக்யாவை ராதிகாவுடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி துன்புறுத்தி வரும் அவர், பாக்யா வேறு ஆண்களுடன் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் பாக்யா தன்னுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் உடன்படிக்கும் பழனிச்சாமி உடன் நட்பாக பழகி வருகிறார். இது கோபிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வப்போது பாக்யாவிடம் சென்று பழனிச்சாமியிடம் பேசக்கூடாது என்று அவருக்கு கட்டளை போட்டு வருகிறார். ஆனால் பாக்யாவோ, நான் யாரிடம் பேசினால் உங்களுக்கு என்ன? நீங்கள் தான் எனக்கு விவாகரத்து கொடுத்து விட்டீர்களே? என்று கோபியை அடக்கி அனுப்பி விடுகிறார். இந்த நிலையில் தற்போது கதைப்படி பாக்யா இனியாவின் கல்லூரியில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியே கோபிக்கு தாங்காத நிலையில் தற்போது அவருக்கு மற்றொரு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அதில் தற்போது பாக்யாவை தேடி ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு கோபி வந்து கொண்டிருக்கிறார். அப்போது வகுப்பறையில் முன்னால் நின்று கோபியும் பழனிச்சாமியும் ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமி உங்களைப் பார்த்த முதல் நாளில் இருந்து உங்களைப் பார்த்த முதல் நாளில் இருந்தே எனக்கு உங்களை பிடித்து விட்டதாக ஆங்கிலத்தில் கூறுகிறார்.

பின்னர் கோபி நின்று கொண்டிருக்கும்போதே பாக்கியாவிற்கு ஐ லவ் யூ என்று ப்ரொபோஸ் செய்கிறார் பழனிச்சாமி் இதை பார்த்த கோபிக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது போல இருக்கிறது. கோபியின் நடிப்பு மிகுந்த காமெடியாக இருக்கிறது. ஆனால் கமெண்டில் பலரும் இந்த கதை செல்லும் போக்கு சரியில்லை என்று விமர்சித்து வருகின்றனர். பழனிச்சாமியும் பாக்யாவும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது அது கதைக்கு நன்றாக இருக்காது என்று விமர்சனங்களை கூறி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்