தளபதி 68-ல் இணையும் பிரபல நடிகர்.? தளபதியின் தம்பி கதாபாத்திரமா? வைரலாகும் தகவல்.!

தளபதி விஜய் தற்போது தனது 68 ஆவது படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைவது ஏறக்குறைய உறுதியாக விட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் புதிய நடிகர் ஒருவர் இணைந்து இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தகவல் உறுதியான தகவல் இல்லை என்றாலும் சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் 66 படங்களில் நடித்து முடித்து தற்போது தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தளபதி 68-ல் இணையும் பிரபல நடிகர்.? தளபதியின் தம்பி கதாபாத்திரமா? வைரலாகும் தகவல்.! 1

விளம்பரம்

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து நான் வரவா என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே இயக்குனர் வெங்கட் பிரபு தளபதியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்தன.

தொடர்புடையவை  நீங்க பண்றது ரொம்ப தப்பு..எல்லாரும் மனுசங்கதான்..பயில்வானை விளாசிய ஆல்யா

லியோ பட சூட்டிங் முடித்து தற்போது துபாய்க்கு விடுமுறையை கழிக்க சென்று இருக்கும் தளபதி திரும்பி வந்தவுடன் தளபதி 68 படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரசியலில் ஆர்வம் காட்டி வரும் விஜய் 68-வது படத்தில் நடிப்பாரா அல்லது கட்சி தொடங்கி அரசியல் பணிகளை கவனிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கும் 68-வது படம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பதால் தளபதியை வைத்து நல்ல திரைக்கதையை அவர் உருவாக்கி இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு வெங்கட் பிரபு மீது எழுந்துள்ளது.

விளம்பரம்

தளபதி 68-ல் இணையும் பிரபல நடிகர்.? தளபதியின் தம்பி கதாபாத்திரமா? வைரலாகும் தகவல்.! 3

இந்த படத்தில் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் எனப்படும் முதற்கட்ட பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டு வருகிறார். வெங்கட் பிரபுவின் படங்கள் பொதுவாகவே பல நடிகர்களை கொண்ட மல்டி ஸ்டார் படங்களாக தான் இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக சென்னை 23, சரோஜா, மங்காத்தா, மாநாடு போன்ற படங்களில் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இருந்து 3வது சிங்கிள் Who am i பாடல் வெளியானது.!

அந்த வகையில் தற்போது தளபதி 68 திரைப்படமும் மல்டி ஸ்டார் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் ஜெய் நடிகர் விஜயின் தம்பியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

தளபதி 68-ல் இணையும் பிரபல நடிகர்.? தளபதியின் தம்பி கதாபாத்திரமா? வைரலாகும் தகவல்.! 5

விளம்பரம்

ஏற்கனவே நடிகர் ஜெய் பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்ற போதிலும் விரைவில் இது குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

விளம்பரம்

Leave a Comment