விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரயலில் குடும்பத் தலைவியாக இருக்கும் ஒருவர் குடும்பத்தின் பாரத்தை சுமப்பதற்காக பல இன்னல்களை சந்திக்கிறார். பல வேலைகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே அவருக்கு அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது. அதற்காக அவர் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்கிறார். பின்னர் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெறவும் விரும்புகிறார். பல இல்லத்தரசிகளுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு தொடராக இந்தத் தொடர் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் என்றாலே சமையலறையில் கிடந்து முடங்கி கிடக்கத் தேவையில்லை. எந்த வயதிலும் படிக்கலாம், பிடித்த வேலையை செய்து நமக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்று பலருக்கும் உந்துதலை கொடுத்து வருகிறது இந்த தொடர். அந்த வகையில் தனது புதிய தொழிலை தொடங்க வங்கிக் கடன் தேடி செல்லும் பாக்யா, அங்கு படித்த பட்டதாரிகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்கிற செய்தியை தெரிந்து கொள்கிறார். தானும் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்று அவருக்கு ஆசை வர, தற்போது கல்லூரியிலும் இணைந்து இருக்கிறார். இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் 25 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று எழிலிடம் கூறுகிறார் பாக்யா.
அப்போது அங்கு வரும் இனியாவின் நண்பர்கள் யார் இவங்க? என்று கேட்க இனியா பதில் சொல்லாமல் முழிக்கிறார். அப்போது பாக்யா, “நான் இனியாவோட அம்மா, இனிமேல் நானும் இங்கு தான் படிக்கப் போகிறேன்” என்று கூற, இனியாவின் தோழிகள் விளையாடாதீங்க, என்று கூறுகின்றனர். அதற்கு விளையாடுகிறேனா என்னை பார்க்க மாணவர் மாதிரி இல்லையா என்று பாக்யா கேட்கிறார். பின்னர் இனியாவின் தோழிகள் இனியாவை பார்த்து முழிக்கின்றனர். அந்நேரம் பார்த்து கோபி இனியாவை பார்க்க கல்லூரிக்கு வருகிறார். அவர் இனியாவை அழைத்துச் சென்று பாக்கியா குறித்து பேசுகிறார். இப்படியாக அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television